க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் ‘வயலட் கனவு’: கதிகலங்க வைக்கும் கால பைரவன்! விரைவில் திரையில்!
1000 நாவல்களுக்கு மேல் எழுதிய – எழுதிக்கொண்டு இருப்பவர், எழுத்துலகின் முடிசூடா மன்னன் ராஜேஷ்குமார். இவரது ‘வயலெட் கனவு’ என்ற த்ரில்லர் நாவல், அதே பெயரில் வெள்ளித்திரையை அதிர வைக்க வருகிறது!
ராஜேஷ்குமாரின் அறிவியல்/தொழில்நுட்ப பின்னணி, வேகமான காட்சி நகர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என வழக்கமான முத்திரை இருக்கும் நாவல்.
‘கால பைரவன்’ என்ற பெயரில் வரும் மர்மமான மரண எச்சரிக்கைக் கடிதங்களும், சில தொலைபேசி எண்களும் கதையின் தொடக்கத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இதற்கிடையே, முக்கியமான உண்மைகளை வெளியே கொண்டு வர முயன்ற பரபரப்பான பத்திரிகையாளர் ஒருவர் திடீரென கடத்தப்பட்டு/காணாமல் போகிறார்.
தொடர்ச்சியாக நடக்கும் சில கொடூரமான சம்பவங்கள் மற்றும் விபத்துகளை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாமல் காவல்துறை திணறுகிறது. இதன் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டத்தை உடைக்க, விவேக் மற்றும் விஷ்ணு களமிறங்குகிறார்கள்.
‘வயலெட் கனவு’ என்ற பெயருக்கும், தொடர் குற்றங்களுக்கும் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான பின்னணி என்ன, காணாமல் போன பத்திரிகையாளரைக் கண்டுபிடித்து குற்றவாளிகளின் சதியை விவேக் குழுவினர் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே கதையின் நகர்வு.
இந்த நாவல்தான், அதே பெயரில் திரைப்படமாக உருவாகிறுத. எம் 4 இண்டர்நேஷ்னல் வழங்கிட, அப்பு மூவிஸ் சார்பில் ஏ.முஸ்தரி மற்றும் பாபு தூயவன் இணைந்து தயாரிக்கின்றனர். திரைப்படக் கல்லூரி மாணவர் பி.நித்யானந்தன் இயக்கி விறுவிறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
‘பாரீஸ் ஜெயராஜ்’ புகழ் விவாந்த் நாயகனாகக் களமிறங்க, ‘அங்காரன்’ பட நாயகி ரெய்னா கதையின் மையப்புள்ளியாகப் பின்னிப் பிணைந்துள்ளார். சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர்.அரவிந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்த மர்ம முடிச்சுகளில் சிக்கித் தவிக்கிறார்கள்!
ஜெகன் கல்யாணின் அதிர வைக்கும் பின்னணி இசை, கீதாகரணின் மிரட்டலான கேமரா கோணங்கள், ஏ.எம்.சயீப்பின் கச்சிதமான வெட்டுக்கள் என திரைப்படக் கல்லூரிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட இளம் ரத்தங்களின் உழைப்பில் படம் அனல் பறக்கிறது.
அக்டோபர் மாதம் திரையரங்குகளில் புயலைக் கிளப்பக் காத்திருக்கும் ‘வயலெட் கனவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் மிக விரைவில் பிரமாண்டமாக வெளியாகிறது. இதுவரை இல்லாத ஒரு புதிய கிரைம் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்!

