’ரெய்டு’ திரை விமர்சனம்

’ரெய்டு’  திரை விமர்சனம்

கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெய்டு.இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி அனந்திகா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். கொம்பன், விருமன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா வசனம் எழுதி இருக்கிறார்.

படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பாடல்கள் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகபப்டுத்தியது.இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

கடமையை சரியாகச் செய்கிற காவல்துறை அதிகாரியாக விக்ரம் பிரபு.சிவராஜ்குமார் நடித்த ‘தகரு’ கன்னடப் படத்தின் ரீமேக் தான் ரெய்டு.

பெண்களை ரகசிய கேமராக்களால் நிர்வாணமாக வீடியோ எடுப்பதும், அவர்களை  காதலிப்பதாக நம்ப வைத்து அந்த விஷயத்துக்கு சம்மதிக்க வைத்து அந்த தருணங்களை வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒரு கும்பல். அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அவர்களை களையெடுக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விக்ரம் பிரபு களமிறங்குகிறார். அந்த ரவுடி கும்பலை பிடித்தாரா நாயகன் என்பது மீதி கதை. இயக்கம் கார்த்தி.

நேர்மையான, துணிச்சலான காவல்துறை அதிகாரியான முறைப்பான பார்வையோடும் விக்ரம் பிரபு ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதிவ்யாவை பார்க்க முடிகிறது. மென்மையான புன்னகையோடு காதலியாக வருகிறார். ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக வருகிற அனந்திகாவின் இளமையும் துறுதுறுப்பும் மனம் கவர்கிறது.

மூன்று கொலை செய்த ரவுடியாக இயக்குநர் வேலு பிரபாகரன்
அவரிடம் தொழில் பழகி பெரிய பெரிய குற்றங்களை பொழுதுபோக்காக செய்கிறார் ரிஷி ரித்விக். செளந்தர்ராஜா, டேனியல் ஆனிபோப் மூவரும் அவர்களால் முடிந்த வில்லத்தனத்தை கதையில் காட்டியிருக்கின்றனர்.

செல்வா, ஜீவா ரவி, ஜார்ஜ் மரியான் என இவர்கள் கதைக்கு தகுந்த நடிப்பை வெளிப்படித்தியிருக்கின்றனர்.

என் [Gun] இருந்தும் தப்பிக்க முடியாது, கண்லேருந்தும் தப்பிக்க முடியாது’ என கவிதைத்தனமாக வந்துவிழும் இயக்குநர் முத்தையாவின் வசனங்களை  ரசிக்க முடிகிறது.

ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு அதிரடியான பின்னணி இசையால் விறு விறுபை கூட்டியிருக்கிறார் சாம் சிஎஸ். மனதை வருடும் பாடல்கள் அழகு. படத்தின் காட்சிகளை கட்சிதமாக கண்முன் காட்டுகிறது கதிரவனின் ஒளிப்பதிவு.

விக்ரம் பிரபுவின் நடிப்பு  பயணத்தில் இந்த படம் குறிப்பிடத்தக்க படமாக இருக்கும் என எதிர்ப்பாக்கலாம்.