பயமறியா பிரம்மை: விமர்சனம்  

பயமறியா பிரம்மை: விமர்சனம்  

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் கொலை குற்றவாளி ஜெகதீஷ். அவரது, வாழ்க்கை வரலாற்றை தொகுத்து புத்தமாக எழுதுவதற்காக அவரை சந்திக்கிறார் எழுத்தாளர் கபிலன்.

ஜெகதீஷிடம், “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் கபிலன்.

“அது எப்படி நடக்கும்?” என்று ஜெகதீஷ் கேட்கிறார்.

ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே திரையில் காட்சிகளாக விவரிக்கிறது  ‘பயமறியா பிரம்மை’.

படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஜெகதீஷ்தான். ஆனால் ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜெகதீஷ் என்ற கதபாத்திரத்தின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை சிறப்பாக  வெளிக்காட்டி உள்ளனர்.

மாறன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் ஜான் விஜய், எழுத்தாளர் கபிலனாக தோன்றும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக வரும்  திவ்யா கணேஷ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

பிரவின் – நந்தா ஒளிப்பதிவும், கே -வின் இசை ஆகியவை படத்துக்கு பலம்.

புத்தகங்கள் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தைவை, என்ற நல்ல விசயத்தை சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குநர் ராகுல் கபாலி. நல்ல விசயம்தான.

ஆனால் வித்தியாசமாக கதை சொல்கிறேன் பேர்வழி என்று, புரியாத புதிராக ஆக்கிவிட்டார்.