மகாராஜா விமர்சனம்
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலம் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, முனிஷ்காந்த் நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மகாராஜா.
அப்பா – மகள் பாசத்தின் பின்னணியில் ஆழமான கதையை அளித்து இருக்கிறார், இயக்குநர் நித்திலம் சுவாமிநாதன்.
சிகை அலங்கார கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதியும் அவருடைய மகளும் முக்கியமாக கருதும் லட்சுமி காணாமல் போகிறது.
இதிலிருந்து வெகு இயல்பாக துவங்கும் திரைக்கதை… மெல்ல மெல்ல வீரியம் அதிகரித்து அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. லட்சுமி என்ன என்பது படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தெரிந்துவிடுகிறது. ஆனாலும் படத்தின் சுவாரஸ்யத்தில் குறையில்லை.
காரணம், வித்தியாசமான திரைக்கதை. அதுவும், நான் லினியர் முறையில் படத்தை அளித்து உள்ளனர்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் 45 வயதை கடந்த மனிதராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இல்லையில்லை.. வாழ்ந்து இருக்கிறார். அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு.
அதேபோல் மற்ற நடிகர்கள் நட்டி, அருள்தாஸ், மணிகண்டன், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் அஜனேஷ் லோகநாத் ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர். படத்தொகுப்பாளர் பிலோமின், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
வசனங்கள் அருமை. குறிப்பாகஇறுதிக் காட்சியில் இடம்பெற்றுள்ள வசனம் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.