லாந்தர்: விமர்சனம்  

லாந்தர்: விமர்சனம்  

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விதார்த். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லாந்தர்’. இந்த படத்தை சஜி படம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எம் சினிமா ப்ரொடக்சன் பேனரின் கீழ் ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இருக்கிறார். திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கோயம்புத்தூர் பகுதியில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றுகிறார் விதார்த்.  ள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை கைது செய்கிறார்.  இதற்கிடையே,   சாலையில் செல்பவர்களை கொடூரமாக தாக்கிக் கொண்டிருக்கிறார் மர்ம நபர். துப்பறிய செல்லும் காவல் அதிகாரிகளும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

அந்த மர்ம சைக்கோவை கைது செய்ய வேண்டும் என்று விதார்த்துக்கு உத்தரவு வருகிறது.

களத்தில் இறங்கும் காவல்துறை அதிகாரி விதார்த், அந்த மர்ம சைக்கோவை பிடித்தாரா… அந்த சைக்கோ யார் என்பதுதான் மீதிக்கதை.

எந்த வேடமானாலும், கில்லியாக பொருந்தி நடிப்பவர் விதார்த். இந்த படத்தில் காவல் அதிகாரி வேடத்துக்கும் கச்சிதமாக பொறுந்துகிறார்.

அவருடைய மனைவியாக வரும் ஸ்வேதாவும் இயல்பாக நடித்து உள்ளார்.

இதர கதாபாத்திரத்தில் நடித்தவர்களும், உணர்ந்ந்து நடித்துள்ளனர்.

த்ரில் படத்துக்கு ஏற்ற மாதிரி சிறப்பாக இருக்கின்றன, இசையும், ஒளிப்பதிவும்.திரில்லர் பாணியிலான படங்கள் நிறைய வந்துவிட்டன.. வந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில் சில வித்தியாசங்களை புகுத்தி கவனிக்க வைக்கிறார் இயக்குநர்.

அதே நேரம் முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் இல்லை.  பிளாஷ்பேக் காட்சிகள் அவ்வளவாக மனதில் ஒன்றவில்லை. லாஜிக் குறைபாடுகளும் இருக்கின்றன.

இதையெல்லாம் மீறி, விதார்த்தின் நடிப்பு, ரசிக்கவைக்கும் திரைக்கதை ஆகியற்றால் படத்தை பார்க்கலாம்.