“பராரி அரசியல்தான் பெஸ்ட்!”: ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்

“பராரி அரசியல்தான் பெஸ்ட்!”: ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்

இயக்குநர் ராஜு முருகன் வழங்க, அவரது உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கியுள்ள திரைப்படம் ‘பராரி’.

ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

22ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசும்போது, “படத்தின் ஆடை வடிவமைப்பு ஒளிப்பதிவில் முக்கிய பங்காற்றியது. படத்தில் நடித்தவர்களுக்கான காஸ்ட்யூம் வாங்க தயாரிப்பாளர் பணம் கொடுத்தார். ஆனால் எனக்கும் இயக்குநருக்கும்,புதுத்துணி கடையில் புதுத்துணி வாங்கக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களிடம் பணம் கொடுத்து பழைய துணிகளை வாங்கினோம். நடிகர்களை அதை உடுத்தச் சொல்லியே படம் எடுத்தோம். படத்தில் ஆடை வடிவமைப்பின் பட்ஜெட் வெறும் எட்டு ஆயிரம் ரூபாய்தான்…” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “கமர்சியல் படங்களில் ஒளிப்பதிவு செய்யும்போது வெறும் டெக்னிக் தெரிந்திருந்தால் போதும்.. ஆனால் அரசியல் படங்களுக்கு பணியாற்றும்போது, அரசியல் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு பெரிய அளவில் அரசியல் தெரியாது. ஆனாலும் இயக்குநருடன் அது குறித்து பேசி, பிறகு ளிப்பதிவு செய்வேன். இதற்கு முன்பு இரண்டு அரசியல் தொடர்பான படங்களில் பணியாற்றியிருக்கிறேன். நானும் நிறைய அரசியல் படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் ‘பராரி’ படம் பேசும் அரசியல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் யார் பக்கமும் சார்ந்து இருக்காமல் பாரபட்சம் இல்லாத இந்த படம் அரசியலைப் பேசும்” என்றார்.

Related Posts