“சமூக நோக்குள்ள படம்!” : ‘பராரி’ குறித்து ராஜூ முருகன்!
இயக்குநர் ராஜு முருகன் வழங்க, அவரது உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கியுள்ள திரைப்படம் ‘பராரி’.
ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
22ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது பேசிய ராஜூ முருகன், “என் உதவியாளர் எழில், கோவிட் நேரத்தில் இந்த படத்தின் ஸ்கிரிப்டை என்னிடம் சொன்னார். சிறப்பாக இருந்தது. அந்த நேரத்தில், ஹரி என்னிடம், நல்ல கதை இருந்தால் தயாரிக்க விரும்புவதாக சொன்னார்.
நான் இருவரையம் சந்திக்க வைத்தேன். அதுதான் என் பங்கு.
இது நல்ல படமாக இருக்கிறது.. இதற்கு மாரல் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்பதால், நான் வழங்குவதாக போட்டிருக்கிறார்கள்.
மற்றபடி பணம் போட்டது ஹரி.. சிந்தனையை போட்டது எழில்… அவர்களுடைய சிறந்த முயற்சிதான் இந்த படம்.
நல்ல நோக்கத்துடன், சமுதாய அக்கறையுடன் படம் எடுத்து இருக்கிறார்கள். அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்றார் ராஜூ முருகன்.