“திருமண உறவை மீறிய ஜோடிக்கு சமமான தண்டனை!”: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்!

“திருமண உறவை மீறிய ஜோடிக்கு சமமான தண்டனை!”: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்!

“திருமண உறவை மீறிய ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதமான தண்டனை அளிக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலன் எழுதி உள்ள பகிரங்க கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

நாளை (நவம்பர் 19)  உலக ஆண்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் வழக்கறிஞர் அருள் துமிலன் கடிதம் எழுதி உள்ளார்.அதில் அவர், “மதிப்புக்குறிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

உலக ஆண்கள் தினமான நவம்பர் 19 தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் வைக்கப்படும் கோரிக்கை:

திருமண உறவை மீறிய பாலியல் தொடர்பால் கொலைகள் நடப்பது மாத செய்தி, வாரச் செய்தியாகி, சமீபகாலமாக  தினசரி செய்தியாகி விட்டது. மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைகள், பால்மனம் மாறா சிறுவர் சிறுமியர் இந்த திருமணத்தை மீறிய

பாலுறவினால் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யப்படும் செய்தி அனைவர் நெஞ்சையும் உலுக்குகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்புகூட, மதுரையில் கள்ளகாதல் விவகாரத்தில் மாமியாரை கொலை செய்த மருமகள் மற்றும் அவரது காதலர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தமிழ் மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கேள்விக்குறி ஆக்கி உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக திருமண உறவை மீறிய பாலியல் உறவில்  ஈடுபடும் ஆண்-பெண் இருவருக்கும் சமமான மற்றும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் புதிய அவசர சட்டத்தினை இயற்றிட வேண்டும்” என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலன் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts