நயன்தாராவுக்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்!

நயன்தாராவுக்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்!

நடிகர் தனுஷை நயன்தாரா இழிவுபடுத்துவதும், குற்றவாளிபோல் சித்தரிக்க முனைவதும் அதற்கு சில நடிகைகள் ஆதரவு தெரிவிப்பதும் கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அந்நிகழ்வை ஆவணப்படமாக உருவாக்கி, ‘‘Nayanthara: Beyond the Fairytale’’ என்ற பெயரில் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

முன்னதாக வெளியான வெளியான ப்ரமோவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்த ‘நானும் ரவுடிதான்’’ படத்தின் போது எடுக்கப்பட்ட மூன்று விநாடி காட்சிகள் இருக்கின்றன. படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், தனது அனுமதி இன்றி அந்த காட்சிகளை சேர்த்ததற்காக, ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு முறையாக பதில் அளிக்காத நயன்தாரா, “நடிகர் தனுஷ், பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடுமைக்காரர், சேடிஸ்ட், தனிப்பட்ட வெறுப்பினால் பழிவாங்குபவர், கீழ்த்தரமானவர், போலி மனிதர்” என்று கடுமையாக தாக்கி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிரங்கக் கடிதம் வெளியிட்டார்.

இது சட்டப்படி தவறு. புதிய சட்டம் bnss 223 -ன் படி ( பழைய சட்டம் crpc 200) தண்டனைக்கு உரியது.

நயன்தாராவின் பதிவுக்கு ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஸ்ருதி ஹாசன், கௌரி ஜி கிஷன், தியா மிர்சா, ஷில்பா ராவ் உள்ளிட்ட நடிகைகள், விருப்பம் ( லைக் குறியீடு) தெரிவித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

தனக்கு சொந்தமான பொருளை வேறு ஒருவருக்கு தானமாகவோ, விற்பனைக்கோ கொடுப்பது உரிமையாளரின் சொந்த விருப்பத்துக்கு உரியது. இதற்காக தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஏசுவதையும் அதற்கு ஆதரவு தெரிவிப்பதையும் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த விசயத்தைப் பொறுத்தவரை, நடிகர் தனுஷுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இருக்கும்” – இவ்வாறு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலன் தெரிவித்து உள்ளார்.

Related Posts