” ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் ஜாலியா இருக்கும்!”: உத்தரவாதம் தருகிறார் மடோனா

” ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் ஜாலியா இருக்கும்!”: உத்தரவாதம் தருகிறார் மடோனா

டிரெண்ட்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் தயாரிக்க, சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா, அபிராமி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘ஜாலியோ ஜிம்கானா’.

அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ள இப்படம் நவ 22ம் தேதி வெளியாக உள்ளது.

படம் குறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மடோனா பேசுமபோது, “இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானவை. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல கமர்ஷியல் படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும். ஆனால், இயக்குநர் சக்தி சிதம்பரம் இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

எனக்கு மட்டுமல்ல அபிராமி, யாஷிகா ஆனந்த் உட்பட மற்ற அனைத்து பெண் நடிகைகளுக்கும் சிறப்பான கதாபாத்திரம் இதில் இருக்கிறது. ஜாலியோ ஜிம்கானா திரைப்படம் சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும்.

டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் என்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இதில் உள்ளது. பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவும், அவருடன் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது” என்றார்.

Related Posts