நிஜ திருட்டில் ஈடுபட்டாரா பிக்பாஸ் பிரபலம்?!: கமல் கண்டிப்பாரா?

நிஜ திருட்டில் ஈடுபட்டாரா பிக்பாஸ் பிரபலம்?!: கமல் கண்டிப்பாரா?

விஜய் டி.வி.யில் இடம் பெறும், பிக் பாஸ் நிகழ்ச்சியில், கதை சொல்லி அனைவரையும் கண்கலங்க வைத்தவர்  பவா செல்லதுரை.

இயல்பிலேயே இவர் கதை சொல்லி. தவிர, கவிஞர், பேச்சாளர், நடிகர், இயற்கை விவசாயி என பல முகங்களை கொண்டவர்.

பலருக்கும் பரிச்சயமற்ற பவா செல்லத்துரையை கமல்ஹாசன் சிறப்பான அறிமுகத்தை கொடுத்து,  பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். எதிர்பார்த்ததைப் போலவே பவா செல்லத்துரை, இளம் போட்டியாளர்களிடையே தனது கருத்துகள் மூலம் விவாதப் பொருளாக மாறியுள்ளார்.   ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

ஆனால் இப்போது அவர் குறித்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ புகழேந்தி, தனது முகநூல் பதிவில் இது குறித்து தெரிவித்துள்ளார்.

அவர், “பவா.செல்லதுரை,  பேரா.வே.நெடுஞ்செழியன்  என்பவருடன்  இணைந்து, ‘சிறகிசைத்த காலம்’ புத்தகத்தை உருவாக்கி வெளியிட்டார். பிரபலங்களின் பள்ளி வாழ்க்கையைப் பற்றி தொகுக்கப்பட்ட நூல் இது.

அதன் முதல் பக்கத்தில் எனது ’கரும்பலகையில் எழுதாதவை’ தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நான் எழுதி இருந்ததில், “பிள்ளைகளே” என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும்  “மாணவர்களே” என்று மாற்றி பயன்படுத்தி உள்ளனர். ஆனால், எனது பெயரையோ  தொகுப்பின் பெயரையோ குறிப்பிடப்படவே இல்லை.

2003இல் முதல் பதிப்பு வந்த போதே இது என் கவனத்துக்கு வந்தது. ஆனால் ‘கல்வி சார்ந்த சீர்திருத்த முன்னெடுப்புக்கான புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு  என் எழுத்து பயன்பட்டு இருக்கிறது’ என்று, நானும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால், தற்போது பிக்பாஸில் பவா பேசியதாக அறியப்படுகிற செய்திகள் அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன.  அதாவது, ‘கல்வி அவசியமில்லை’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறாராம்.

‘இப்படிப்பட்ட கருத்தை கொண்ட பவா, கல்வி சீர்திருத்தத்துக்கான ‘சிறகிசைத்த காலம்’ போன்ற நூலை ஏன் தொகுத்தார்? எல்லாமே வெற்று விளம்பரங்களுக்கான செயல்பாடுகள்தானா?’ என்கிற கேள்வி எழுகிறது” என்று வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார் பழ.புகழேந்தி.

அதோடு, தனது, ‘கரும்பலகையில் எழுதாதவை’ நூலில் இடம் பெற்ற அந்த கவிதை (பக்கத்தை) யும், அதில் ஒரே ஒரு வார்த்தையை மாற்றி பவா செல்லதுரை அவரது ‘சிறகிசைத்த காலம்’ வெளியிட்ட பக்கத்தையும் இணைத்துள்ளார்.“‘பொருள் திருட்டை விட அறிவுத்திருட்டு கொடுமையானது’  என்பார்கள்.

அதுவும் கலை, இலக்கியத்தில் பிரபலமானவர் என அறியப்படும் பவா செல்லத்துரை.. அதிலும் இலக்கிய அறிவுள்ளவர் என அறியப்படும் நடிகர் கமல்ஹாசனால் பிக்பாஸில் புகழப்பட்டவர்.. இப்படி செய்திருக்கிறாரே..! இதை கமல் கண்டித்து பவாவை விளக்கம் சொல்ல வைப்பாரா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Posts