தீவிரதிகளிடம் கதறும் கதறும் இளம் பெண்! அதிர்ச்சி வீடியோ!

தீவிரதிகளிடம் கதறும் கதறும் இளம் பெண்! அதிர்ச்சி வீடியோ!

ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மூலம் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் பதிலுக்கு தாக்குதல் நடத்தியது.  “போர் மூண்டு இருக்கிறது” என இஸ்ரேல் அறிவித்தது.

இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ பதற வைத்து இருக்கிறது.

25 வயது இஸ்ரேலியப் பெண்ணை ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திச் செல்கின்றனர். அந்தப் பெண் “என்னைக் கொன்றுவிடாதீர்கள்” எனக் கதறுகிறார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் பயங்கரவாதிகள் அடித்து இழுத்துச் செல்கின்றனர். பிறகு அவரை அவசர அவசரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையில் உள்ள காசா பகுதிக்குள் கொண்டு சென்றுவிடுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி பதறவைத்து உள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நோவா அர்காமனி என்பதும் அவரின் நண்பர் பெயர் அவி நாதன் என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் சேர்ந்து இஸ்ரேல் தெற்கில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது திடீரென மூண்ட போரில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்றிருந்த இசை நிகழ்ச்சி அமைதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி. ஆனால் இப்போது நோவா ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். காசாவுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அவரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

இந்தச் சூழலில் அவரது குடும்பத்தினர் நோவாவை மீட்டுத்தரக் கோரி சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். நோவா உங்கள் மகளாக, சகோதரியாக, தோழியாக இருக்கலாம் என்று உருக்கமாக பதிவுகளை பகிர்ந்துள்ளார் இஸ்ரேல் எழுத்தாளர் ஒருவர். அவரது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறாக இந்த இரண்டு நாட்களில் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பலரைப் பற்றி துயரக் கதைகள் இடம்பெற்றுள்ளன.