’க’ ஓணம் ஸ்பெசஷல் சிறு பருப்பு பாயாசம்
உணவே மருந்து அஞ்சறைப் பெட்டியில் உள்ளது ஆரோக்கியம்’ என நமது முன்னோர்கள் அப்போதே கூறி வந்தனர். இந்த கொரோனா பாதிப்புக்கு பின் பாரம்பரிய உணவுக்கே மக்கள் அதிக முக்கியதுவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாரம் பரிய உணவுகளுக்கு மட்டுமே முக்கிய துவம் வாய்ந்த ’க’ இயற்கை உணவகத்தின் ஸ்பெஷல் சிறு பருப்பு பாயாசம்.
தேவையான பொருட்கள்:
குழைய வேக வைத்த பாசிப் பருப்பு – அரை கப்,
வெல்ல துாள் – 100 கிராம்,
கெட்டி தேங்காய் பால் – ஒரு கப்,
ஏலக்காய் துாள் – கால் தேக்கரண்டி,
முந்திரி, திராட்சை – தலா 10,
பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் துண்டு -4
நெய் – 3 தேக்கரண்டி.
செய்முறை: வெல்லத்தை தட்டி சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்து, எடுத்துக் கொள்ளவும்.
அந்தே நெய்யில் வேக வைத்த பாசிப் பருப்பையும் சேர்த்து கிளறவும். பிறகு வெல்ல கரைசல், ஏலக்காய் துாள் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் கட்டி தேங்காய் பால் கலந்து உடனே இறக்க வேண்டும். வறுத்த, முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை ஆகியவற்றை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
– யாழினி சோமு