ஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி!
கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவருகிறது. ஏழை எளிய சாமானிய மக்களுக்கு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவியும் வருகின்றனர். பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த சூழ்நிலையில். நடிகை ஷனம் ஷெட்டி தனது குடியிருப்புக்கு அருகில் இருக்கும். திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக “நம் மக்களின் குரல்” என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார்.
“நம் மக்களின் குரல்” என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற என்ஜிஓ குழுவும் இணைந்து அன்றாட பிழைப்பாளிகளான திருவான்மியூர் குறவர் இனத்தைச் சார்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முககவசங்களும் ரேசன் பொருட்களும் கொடுத்து உதவி உள்ளனர்.
– யாழினி சோமு