கோட்: பிரான்ஸ் நாட்டில்… உலகின் பெரிய தியேட்டரில் ஹவுஸ் ஃபுல்!

கோட்: பிரான்ஸ் நாட்டில்… உலகின் பெரிய தியேட்டரில் ஹவுஸ் ஃபுல்!

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்க விஜய்  நாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்). படத்தில் இவர் இரட்டை வேடங்களில் தோன்றுகிறார்.

ஹவுஸ்புல்

இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகளும், நான்கு பாடல்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் உலகம் முழுதும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

கிராண்ட் ரெக்ஸ் தியேட்டர்

இந்திய மொழி திரைப்படங்களை பிரான்ஸ் நாட்டில் வெளியிடும்,   ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) நிறுவனம், இப்படத்தை பிரான்ஸ் நாட்டில் வெளியிடுகிறது. இதற்கு முன் லியோ,  வாரிசு உள்ளிட்ட பல திரைப்படங்களை பிரம்மாண்டமாக வெளியிட்டதும் இந்நிறுவனம்தான்.

இந்நிறுவனத்தின் அதிபர் ஜெயந்தன், இது குறித்து கூறும்போது, “பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 80 திரையரங்குகளில் கோட் படம் வெளியாகிறது. இதில் கிராண்ட் ரெக்ஸ் (grand rex) உலக அளவில் பெரிய திரையங்குகளில் ஒன்று. இதில் கோட் படத்துக்கான முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

Related Posts