ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – விமர்சனம்

’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ 1973-ல் கதை தொடங்குகிறது, எஸ் ஜே சூர்யா மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக கதையில் காட்டுகிறார்கள்.   எஸ் .ஏ ஆக காவல் துறையில் பணியில் சேர இருக்கிறார்.

அப்போது தனது  காதலியை பார்க்க, கல்லூரிக்கு வருகிறார் அங்கு 4 பேரை கொன்று அந்த பழியை எஸ் ஜே சூர்யா மேல் விழுகிறது அவரை காவல்துறை கைது செய்கின்றனர். அதே நேரத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவர் அரசியலிலும் இருக்கிறார். தன் போட்டி அரசியல்வாதியை காலி செய்தால்  தான் தனக்கு CM பதவி  கிடைக்கும் என்று எண்ணுகிறார்.

இந்த அரசியல்வாதிக்கு பக்கபலமாக இருக்கிறார்  ஆலிஸ் சீசர்(ராகவா லாரன்ஸ்) இவரை போட்டு தள்ள வேண்டும், அதற்காக எஸ் ஜே சூர்யாவை சிறையில் இருந்து வெளியே அனுப்பி அவரை கொல்ல சொல்கின்றது ஒரு கூட்டம். அவரும் லாரன்ஸுக்கு சினிமா ஆசை இருப்பதை தெரிந்து கொண்டு இயக்குனர் என சொல்லி  சீசரிடம் நெருங்குகிறார். பிறகு என்ன நடந்தது என்பது தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை.

லாரன்ஸ் இதுநாள் வரை பார்த்திராத, பன்ச் அடிக்காத கதாபாத்திரத்தில்  நடிப்பில் அசத்தியுள்ளார். பொய்யாக இருந்தாலும் பயத்தை உள்ளே வைத்துக் கொண்டு இயக்குனராக நடிக்கும் எஸ் ஜே சூர்யா கம்பீரமாக லாரன்ஸிடம் பேசும் காட்சி அவரும் தன் பங்கிற்கு அசத்தலாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.    கூடிய சீக்கிரம் ஒரு கருப்பு ஹீரோ உங்களை ஓட விடுவேண்டா  என ரஜினி சினிமாவில் வந்த வருடத்தில் படம் தொடங்க, ரஜினி அபூர்வ ராகங்கள் என்ட்ரி ரெபரன்ஸ் என கார்த்திக் சுப்புராஜ் தனக்கான  அடையாளத்தை பதித்துள்ளார்.

லாரன்ஸுக்கு சீசர் பெயரை வைத்ததே ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் க்ளீண்ட் ஈஸுவட் என்று அதை காட்டிய விதம் சபாஷ். முதல் பாதி முழுவதும் எஸ் ஜே சூர்யா லாரன்ஸை கொள்வாரா … இல்லையா? என பரபரப்பாக செல்கிறது.  இடைவேளையில் எல்லோரும் ஒரு இடத்தில் மாட்டிக் கொள்ள அங்கு நடக்கும் காட்சிகள் பரபரப்பின் உச்சம்.

இரண்டாம் பாதியில் மலைவாழ் மக்கள், அவர்களின் வாழ்வாதாரம், அரசாங்கத்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி திசை திரும்புகிறது என்பதை ரசிகர்களின் மனதில் பதிய வைத்து கை தட்டல் வாங்குகிறார் இயக்குனர்.

திருவின் ஒளிப்பதிவு காட்டு பகுதியில்  யானைகளை பிடிக்கும் காட்சிகள் எல்லாம் சபாஷ், படத்தின் முதல் பாதி  ஒரு ரவுடி  சினிமாவில் ஹீரோ ஆவது.  இரண்டாம் பாதி  அதே ரவுடி மக்களுக்கான நாயகனாக  உருவெடுக்க வைப்பது இரண்டு படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

படத்தின் பக்கபலமாக இருப்பது  சந்தோஷ் நாராயணன் இசை, திரு ஒளிப்பதிவு கைகொடுக்கிறது.

படத்தில் நடித்த அத்தனை பேரும் அற்புதமான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்கள். டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் சூப்பர், குறிப்பாக யானை பிடிக்கும் காட்சிகள் சபாஷ்.

படம் 3 மணி நேரம் என்றாலும் சுவாரஸ்யம் குறையாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். சினிமா நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம் என  சினிமாவை  சினிமாவுக்கே  காட்டும் கலையை கார்த்திக் சுப்புராஜ் இடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தீபாவளிக்கு சரவெடி, அதிரடி படமாக  ரசிகர்களுக்கு விருந்து படைத்து விட்டார் இயக்குனர் கார்த்திக்  சுப்புராஜ்.