டாக்டர் சரவணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த தே.மு.தி.க &  அ.ம.மு.க.வினர்

டாக்டர் சரவணன் தலைமையில் மதுரையில் மினி மாராத்தான் போட்டி நடந்தது. மேலும் அவர் முன்னிலையில், தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பா.ஜ.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மதுரை   மாநகர் மாவட்டபா.ஜ.க.வின் தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து, கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

டாக்டர் சரவணன் முன்னிலையில், தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பா.ஜ.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஏப்ரல் 9ம் தேதி, மதுரை மாநகர் மாவட்ட பாஜக விளையாட்டு பிரிவு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

நிகழ்வுககு, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார்.  மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர பிரசாத் ரெட்டி, மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் செந்தில் குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் டாக்டர் இராம ஸ்ரீநீவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மினி மராத்தான் போட்டிக்கு தலைமை வகித்த டாக்டர் சரவணன்

இந்த நிலையில், ஏப்ரல் 10ம் தேதி,  டாக்டர் சரவணன் முன்னிலையில்  தே.மு.தி.க. மற்றும் அ.ம.முக.வைச் சேர்ந்த  திரு.சசிகுமார், திரு.மகாலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள்  பா.ஜ.க.வில் இணைந்தனர்.

நிகழ்வில்  OBC அணி மாநில துணைத்தலைவர் ரவிபாலாவும் கலந்துகொண்டனர்.

டாக்டர் சரவணனும், ரவிபாலாவும் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இருவருக்கும் மாலை அணிவித்து மகிழ்ந்தனர், புதிதாக இணைந்தவர்கள்.

“மதுரை மாநகர் மாவட்ட தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, கட்சிப் பணிகள் வேகமெடுத்துள்ளன  என்பதற்கு மேற்கண்ட இரு சம்பவங்களும் கூடுதல் உதாரணங்கள்!” என மதுரை பா.ஜ.க.வினர் பெருமிதமாகச் சொல்கிறார்கள்.

(முகப்பு படம்: மாற்றுக் கட்சியினர் டாக்டர் சரவணன் முன்பு பா.ஜ.க.வில் இணைந்த போது..)

Related Posts