சரவணனின் லெஜண்ட் பாடல்: 15 லட்சத்தைக் கடந்தது!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தயாரித்து நடிக்க, ஜேடி ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கும், லெஜண்ட் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.

 படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணனுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி என்பவர் நடிக்கிறார்.

மறைந்த நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு வசனம் எழுத, இந்தப் படத்துக்கு வைரமுத்து, கபிலன், பா.விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்து உள்ளனர்.  

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலை, இயக்குநர்கள் மணிரத்தினம் , எஸ்.எஸ்.ராஜமவுலி, சுகுமார் ஆகியோர் நேற்றஉ வெளியிட்டனர். ஒரே நாளில் 15 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துளது இப்பாடல்.

 

 

 

 

Related Posts