” டீன்ஸ் படத்துக்கு ஆதரவு இல்லேன்னா…!”: பார்த்திபன் எடுத்த விபரீத முடிவு!
இரவின் நிழல் படத்தை அடுத்து ஆர் பார்த்திபன் இயக்கியுள்ள படம் டீன்ஸ். பயாஸ்கோப் மற்றும் அகிரா ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இசை – டி.இமான்.
மூட நம்பிக்கைக்கு எதிராக சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி இருக்கும் டீன்ஸ், கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்
“Friends சத்தியமா சொல்றேன்… TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்ன, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே.
இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thoughtஇல் எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.
நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.
நனைந்த இமைகளோடு இராதாகிருஷ்ணன் பார்த்திபன்” – இவ்வாறு பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.