துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்”: ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் ரிலீஸ்!
மலையாள திரையுலகின் ஸ்டைலிஷ் ஸ்டார் துல்கர் சல்மான், தனது 40-வது ஆட்டத்தில் இறங்கிவிட்டார்! பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வந்த “ஐ அம் கேம்” (I Am Game) திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஒட்டுமொத்தமாக 156 நாட்கள் நடந்து முடிந்து, இப்போது ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.
மெகா பட்ஜெட்… மெகா ஹிட் லோடிங்!
சும்மா சாதாரணமான படம் இல்லீங்க இது! தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில், சுமார் 11 மாதங்கள் செதுக்கி செதுக்கி எடுத்திருக்கிறார்கள். ‘RDX’ எனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மானின் கரியரிலேயே இதுதான் மிகப் பெரிய பட்ஜெட் படம். ஸ்டைலிஷான மாஸ் லுக்கில் துல்கர் மிரட்டப் போவது கன்பார்ம்!
நட்சத்திரப் பட்டாளம்!
வேஃபாரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில், துல்கருடன் இணைந்து ஆண்டனி வர்கீஸ், நம்ம ஊர் ‘மிஷ்கின்’, கயாது லோஹர், கதிர் என ஒரு பெரிய ஸ்டார் காஸ்டே களம் இறங்கியிருக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் தெறிக்கப் போகிறது என்றால், அன்பறிவ் மாஸ்டர்களின் ஆக்ஷன் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கப் போகிறது.
பான்-இந்தியா ட்ரீட்!
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் அதிரடியாக வெளியாகவிருக்கும் இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 2026-ல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமிக்கப் போகிறது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தை ஒரு வழி பண்ணிவிட்ட நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு ரசிகர்கள் இப்போதே ‘வெயிட்டிங்’!
கேம் இன்னும் கொஞ்ச நாளில் ஆரம்பம்… கெத்தா ரெடியாகுங்க மக்களே!
