“அந்த கேரக்டர்ல இருந்து மீளவே முடியல!”: ‘ஹைக்கூ’ ஸ்ரீதேவி நெகிழ்ச்சி!
தெலுங்கில் ‘கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் நோபடி’ படத்துக்குப் பிறகு, இப்போது ‘ஹைக்கூ’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருப்பவர், ஸ்ரீதேவி. ‘ஹைக்கூ’ பட அனுபவம் குறித்து இவர் பகிர்ந்துகொண்டதாவது..
“நீங்க எல்லாரும் தந்துட்டு இருக்கிற வரவேற்பும் பாராட்டும் என் மனசை நெகிழ வச்சுருக்கு. பத்திரிகையாளர்கள், மீடியா நண்பர்கள், தியேட்டர்ல படம் பார்த்த ரசிகர்கள்னு எல்லோரும் என் நடிப்பைக் கொண்டாடுறதை விட ஒரு நடிகைக்கு வேற என்ன சந்தோஷம் வேணும்?
இயக்குநர் யுவராஜ் கதை சொன்னப்போவே, இந்தக் கதாபாத்திரத்துக்குள்ள பல உணர்வுப்பூர்வமான அடுக்குகள் இருக்கிறதை உணர்ந்தேன். படப்பிடிப்பு முடிஞ்சது, டப்பிங் வேலைகள் முடிஞ்சதுன்னு எல்லாமே முடிஞ்ச பிறகும் கூட, அந்தக் கதாபாத்திரத்திலிருந்து என்னால வெளியே வர முடியல. இன்னைக்கும் அந்த கேரக்டரை என் மனசுக்குள்ள ரொம்பப் பத்திரமா சுமந்துட்டு இருக்கேன்!
இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் என்னோடு இணைந்து பணியாற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்” என்றார்.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து தயாரிப்பில், சித்து குமார் இசையில், பிரியேஷ் குருசாமி கேமராவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஏகன், ஃபெமினா ஜார்ஜ் கூடவே அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

