மிஸ்டர் எக்ஸ்: உலகத்தரத்தில் ஓர் உளவுத்துறை திரைப்படம்!

மிஸ்டர் எக்ஸ்: உலகத்தரத்தில் ஓர் உளவுத்துறை திரைப்படம்!

‘FIR’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மனு ஆனந்த், மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லருடன் களம் இறங்கியிருக்கிறார். ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ ரசிகர்களைக் கவர்ந்ததா? பார்ப்போம்.


கதைக்களம்

இந்தியாவின் மிக ரகசியமான ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் ரா (RAW) ஏஜெண்டாக சரத்குமார் வருகிறார். இமயமலையில் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட அணு ஆயுத மூலக்கூறு பொருள் ஒன்றை ரஷ்யக் கடத்தல்காரர்கள் திருடிச் செல்ல முயல்கின்றனர். அதைத் தடுக்க முயலும் சரத்குமார் அவர்களிடம் சிக்கிக்கொள்ள, அந்த ஆபத்தான மிஷனைத் தொடர கௌதம் (ஆர்யா) மற்றும் அமரன் (கௌதம் கார்த்திக்) களம் இறங்குகிறார்கள். சென்னையில் நடக்கும் ஜி20 மாநாட்டின் போது நடத்தப்படும் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டைப் பாதுகாத்தார்களா? யார் அந்த மிஸ்டர் எக்ஸ்? என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.


நடிப்பு: நட்சத்திரங்களின் சங்கமம்

  • ஆர்யா: கட்டுமஸ்தான உடல்வாகு, ஸ்பை ஏஜெண்டிற்குத் தேவையான விறைப்பான வேகம் என ஆர்யா மிரட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது. எமோஷனல் காட்சிகளிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

  • கௌதம் கார்த்திக்: இந்தப் படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் இவர்தான். இதுவரை ஹீரோவாகப் பார்த்த கௌதம், இதில் வில்லத்தனம் கலந்த ஒரு மாற்றுப் பரிமாணத்தில் அசத்தியிருக்கிறார். அவரது நக்கலான சிரிப்பும், ஃபிட்னஸும் கேரக்டருக்கு பலம் சேர்க்கிறது.

  • மஞ்சு வாரியர்: உயர் அதிகாரியாக மஞ்சு வாரியர் கெத்து காட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டும் வேகம் ‘கூஸ்பம்ஸ்’ ரகம்.

  • சரத்குமார்: ‘மிஸ்டர் எக்ஸ்’ கதாபாத்திரத்தில் சரத்குமார் வரும் இடங்கள் ஒவ்வொன்றும் தியேட்டரில் விசில் சத்தத்தைப் பறக்க விடுகின்றன. அனுபவ நடிப்பால் படத்திற்குத் தூணாக நிற்கிறார்.

  • இதர நட்சத்திரங்கள்: அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன் எனப் படத்தில் வரும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்திற்கும் கதையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதுல்யாவின் அப்பாவித்தனமான நடிப்பும், ரைசாவின் ஸ்டைலிஷ் தோற்றமும் கவனிக்க வைக்கின்றன.

தொழில்நுட்பம்: ஒரு தரமான மேக்கிங்

  • ஒளிப்பதிவு (அருள் வின்சென்ட்): மாஸ்கோ, சென்னை, இமயமலை எனப் பல்வேறு லொகேஷன்களையும் அதன் தன்மை மாறாமல் படம்பிடித்திருக்கிறார். ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான அந்த விறுவிறுப்பான வண்ணக் கோர்வை படத்திற்குப் பலம்.

  • இசை (திபு நினன் தாமஸ்): பின்னணி இசையில் திபு மிரட்டியிருக்கிறார். படத்தின் டெம்போ குறையாமல் இருக்க இவரது இசை பெரிய அளவில் கைகொடுக்கிறது. பாடல்களை விட பிஜிஎம் (BGM) அதிரடியாக அமைந்துள்ளது.

  • படத்தொகுப்பு (ஜி.கே. பிரசன்னா): பல கிளைக் கதைகளை (Tracks) குழப்பம் இல்லாமல் இணைத்து, விறுவிறுப்பான திரைக்கதையைச் செதுக்கியிருக்கிறார். ஷார்ப்பான எடிட்டிங் படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.

  • சண்டைப்பயிற்சி (ஸ்டண்ட் சில்வா): ஆக்ஷன் காட்சிகள் தான் இந்தப் படத்தின் உயிர்நாடி. சர்வதேசத் தரத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

இயக்கம்: மனு ஆனந்த்

யக்குநர் மனு ஆனந்த், இந்திய உளவுத்துறை குறித்த ஏகப்பட்ட புதிய தகவல்களைக் கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். அணு உலை ரகசியங்கள், உளவாளிகளின் வாழ்க்கை முறை என ஒரு ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் சரியாகச் சேர்த்திருக்கிறார். கிளைமாக்ஸில் வரும் அந்த ‘காமினி’ ட்விஸ்ட் படத்தின் வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் மனு ஆனந்த், “படம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். பிடித்திருந்தால் பாராட்டுங்கள். இல்லை என்றால் விமர்சியுங்கள். அது என் வளர்ச்சிக்கு உதவும்” என சொல்லி இருந்தார். அதில், இடைச் செருகலாக ஒரு கர்வம் இருப்பதாக பட்டது.

படம் பார்த்த பிறகு தோன்றுகிறது.. மனு ஆனந்துக்கு இருப்பது கர்வம் அல்ல.. கம்பீரம்!


பிளஸ்:

  • ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இடையிலான மோதல்.

  • மஞ்சு வாரியரின் ஆக்ஷன் அவதாரம்.

  • சர்வதேசத் தரத்திலான மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை.

  • கிளைமாக்ஸ் திருப்பங்கள் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான லீட்.

மைனஸ்:

  • சில இடங்களில் யூகிக்கக்கூடிய திருப்பங்கள்.

  • குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.


பைனல் பஞ்ச்

மிஸ்டர் எக்ஸ் – சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு பக்கா ஸ்பை ஆக்ஷன் ட்ரீட்!

ரேட்டிங்: 4.2 / 5

Related Posts