சைதையாரின் மனிதநேயம் தொடர் சாதனை: குரூப்-1 தேர்வில் 32 சிங்கங்கள் வெற்றி!
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட குரூப்-1, 1ஏ பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், சென்னை சைதை துரைசாமியின் ‘மனிதநேயம் அறக்கட்டளை’ மீண்டும் ஒருமுறை தனது முத்திரையைப் பதித்துள்ளது. 80 காலிப் பணியிடங்களுக்கான இந்த கடும் போட்டியில், மனிதநேயத்தில் பயின்ற 20 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 32 பேர் வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளனர்!
டாப் 10-ல் இடம்பிடித்த ‘மனிதநேய’ வைரங்கள்!
வெறும் வெற்றி மட்டுமல்ல, தரவரிசைப் பட்டியலின் டாப் இடங்களையும் மனிதநேய மாணவர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.
-
4-வது இடத்தில் மதுரையைச் சேர்ந்த சுபத்ரா
-
7-வது இடத்தில் கோவையின் லார்சன் இஸ்ரேல்
-
10-வது இடத்தில் விருதுநகர் சித்தார்த் எனப் பலரும் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
ஆண்களின் அதிரடி ‘ரீ-என்ட்ரி’!
இந்த முறை தரவரிசையில் மற்றொரு ஸ்பெஷல் ஹைலைட் உண்டு. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 13 ஆண்டுகள் கழித்து எம்.சுப்பிரமணியன் என்ற ஆண் தேர்வர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே திவ்யாலட்சுமியும், பிரதீப்பும் தட்டிச் சென்றனர்.
வெற்றிக்கு பின்னால் இருந்த ‘மேஜிக்’ பயிற்சி!
இந்த வெற்றி சும்மா கிடைக்கவில்லை! மனிதநேயம் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அதிரடி பயிற்சிகளே இதற்கு காரணம்:
-
மாடல் தேர்வுகள்: முதன்மைத் தேர்வுக்கு நேரடி மற்றும் மாதிரித் தேர்வுகள் மூலம் விடைகள் திருத்திக் கொடுக்கப்பட்டன.
-
வல்லுநர் குழு: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் உளவியல் நிபுணர்களைக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
-
தனித்திறன் பயிற்சி: கையெழுத்துத் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த சிறப்புப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.
“மனிதநேயம் வளர்ப்போம்… மானுடம் மீட்போம்!” என்ற தாரக மந்திரத்துடன், கட்டணமில்லாப் பயிற்சி அளித்து இன்று 32 குடும்பங்களில் ஒளியேற்றியுள்ள சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
