தனுஷ் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனது ஐம்பதாவது படமான, ராயர் திரைப்படத்தை, இயக்கி நடிக்கிறார் தனுஷ். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி எனப் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 26 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தில் தனுஷ், டான்-ஆக நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு, அவர் under cop ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்திற்கு, தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்தது.
தற்போது, படத்தின் டிரைலர் வருகிற ஜூலை 16 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.