தீ தீ தித்திக்கும் தீ!: உலகை அதிரவைக்கும் இசைக் கனல் இலங்கையில் மையம்!

தீ தீ தித்திக்கும் தீ!:  உலகை அதிரவைக்கும் இசைக் கனல் இலங்கையில் மையம்!

லங்கையில் பிறந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கலைத்திறனை மெருகேற்றி, இன்று உலகத் தமிழர்களின் ‘மியூசிக் ஐகானாக’ உயர்ந்து நிற்கிறார் பாடகி தீ. மரபு மாறாத தமிழ் வேர்களையும், நவீன உலகளாவிய இசை நுணுக்கங்களையும் சரிவிகிதத்தில் கலந்து, ஒரு புதிய இசை சாம்ராஜ்யத்தையே இவர் உருவாக்கியுள்ளார்.

வேர்களைக் கொண்டாடிய ‘என்ஜாய் என்ஜாமி’!

வெறும் பாடல் என்பதையும் தாண்டி, ஒரு பண்பாட்டுப் புரட்சியை ஏற்படுத்தியது தீ-யின் ‘என்ஜாய் என்ஜாமி’. ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து, இந்திய சுயாதீன இசையை (Independent Music) உலக வரைபடத்தில் உச்சாணிக் கொம்பில் ஏற்றியது இந்தப் பாடல். மண்ணின் மைந்தர்களின் கதையை, ஒரு நவீன அடையாளத்தோடு தீ வழங்கிய விதம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

விருதுகளும்.. வியக்க வைக்கும் சாதனைகளும்!

தன்னுடைய தனித்துவமான குரலால் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட மிக உயரிய விருதுகளைத் தட்டிச் சென்றவர் தீ. ‘I Wear My Roots Like A Medal’, ‘Can’t You Stay A Little Longer’ போன்ற சுயாதீனப் பாடல்கள் மூலம், இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஓர் உணர்வுப்பூர்வமான கலைப் பயணம் என்பதை நிரூபித்து வருகிறார்.

மீண்டும் மண்ணின் மடியில் – ‘வாரி வாரி’!

தற்போது தனது அடுத்த அதிரடியான படைப்பான ‘VARI VARI’ இசை ஆல்பத்தோடு, தான் பிறந்த இலங்கை மண்ணிற்கு வருகை தந்துள்ளார் தீ. தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய மண்ணுடன் மீண்டும் இணையும் இந்த நெகிழ்ச்சியான தருணம், அவரது கலைப் பயணத்தில் ஒரு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய அத்தியாயம்.

எதிர்வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட இசை ஆல்ப வெளியீட்டு விழா, எல்லைகளைக் கடந்து நிற்கும் தீ-யின் இசை ஆளுமைக்கு மற்றுமொரு சான்றாக அமையப்போகிறது. தயார் நிலையில் இருங்கள்… தீ-யின் இசை மழையில் நனைய!

Related Posts