யூபிஎஸ்சி நேர்முகத்தேர்வு: சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் அதிரடி இலவச பயிற்சி!

யூபிஎஸ்சி நேர்முகத்தேர்வு: சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் அதிரடி இலவச பயிற்சி!

த்திய ஆயுதப்படை காவல் உதவி கமாண்டண்ட் பணிக்குக் குறிவைப்பவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! இதற்கான நேர்முகத் தேர்வுக்கு (Interview) இலவசப் பயிற்சியை வழங்கத் தயாராகிவிட்டது, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ‘மனிதநேயம் இலவச ஐஏஎஸ் கல்வியகம்’.

வெற்றிப் பாதைக்கு ஒரு களம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் தொடங்கி டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் வரை, இதுவரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறது இந்த மையம். அந்த வரிசையில் இப்போது மத்திய ஆயுதப்படைப் பணிக்கும் களம் இறங்கியுள்ளனர்.தேர்வு நிலவரம் என்ன?

  • காலியிடங்கள்: மொத்தம் 357 இடங்கள்.

  • நடந்தது என்ன? இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 2025 ஆகஸ்டில் நடந்தது. முடிவுகள் அக்டோபர் 10-ல் வெளியாகின.

  • தகுதி பெற்றவர்கள்: எழுத்துத்தேர்வில் வென்ற 1,019 பேருக்கான நேர்காணல், வரும் மே 4 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

  • நம்மூர் சாதனை: இந்த நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளவர்களில் 23 பேர் மனிதநேயம் மையத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச மாதிரி நேர்முகத்தேர்வு: இன்டர்வியூ என்றாலே இருக்கும் ஒருவிதத் தயக்கத்தைப் போக்க, நிஜ நேர்காணல் போலவே ‘மாதிரி நேர்முகத் தேர்வை’ (Mock Interview) மனிதநேயம் அறக்கட்டளை நடத்துகிறது. இந்த மையத்தில் படித்தவர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே பதிவு செய்துள்ள மற்ற தேர்வர்களும் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் எனச் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

பதிவு செய்வது எப்படி?

  • இணையதளம்: www.mntfreeias.com

  • நேரடித் தொடர்பு: 044-24358373, 24330095, 9840439393, 8428431107

இந்த எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாக மையத்திற்குச் சென்றோ உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். அரசுப் பணி கனவில் இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு!

Related Posts