” பிரேக் பாஸ்ட் – சுவையான நாவல்!”: ஜி.வி.பிரகாஷ் பாராட்டு!
இசையால் இதயங்களை வருடுவதிலும், நடிப்பால் ரசிகர்களைக் கவர்வதிலும் ‘ஆல் ரவுண்டராக’ வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தத் தயாராகிவிட்டார். ‘ஆனந்த தாண்டவம்’ எனும் க்ளாசிக் படைப்புக்குப் பிறகு, இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் அவர் கைகோர்த்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது!
“காந்தி கிருஷ்ணா சார் ஒரு நாவலாசிரியர்!” – சிலாகிக்கும் ஜி.வி.

படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டபோது:
“காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைவது ஒரு நெகிழ்ச்சியான பயணம். என் திரைப் பயணத்தின் மிக முக்கியமான மைல்கல்லான ‘ஆனந்த தாண்டவம்’ படத்தில் எனக்குப் பெரிய அடித்தளமிட்டவர் அவர். ஒரு சிறந்த நாவலைப் படிப்பது போன்ற ஆழமான உணர்வை திரையில் கொண்டு வருவதில் அவர் கில்லாடி. மனித உறவுகளின் சிக்கல்களையும், அதன் பின்னால் இருக்கும் நுணுக்கமான உணர்வுகளையும் மிக நேர்மையாகப் பேசக்கூடியவர்.”
உணர்வுகளின் சங்கமமாக ‘பிரேக்ஃபாஸ்ட்’!
இன்றைய நவீன காலத்து உறவுகளில் இருக்கும் சிக்கல்களைப் புட்டுப் புட்டு வைக்கும் இந்தப் படத்திற்கு, கதையோடு இரண்டறக் கலக்கும் இசையைத் தந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். காட்சிகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தை ரசிகர்களுக்குக் கடத்தும் ஒரு பாலமாக இசை அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோரின் வரிகளில் பாடல்கள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை!
நட்சத்திரப் பட்டாளம்:
ராணவ், ரோஸ்மின் நாயகன்-நாயகியாக அறிமுகமாக, சம்பத் ராஜ், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் என ஒரு வலுவான நட்சத்திரப் பட்டாளமே இதில் களமிறங்கியுள்ளது.
கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், குகன் விநியோகத்தில் உருவாகியுள்ள இந்தப் ‘பிரேக்ஃபாஸ்ட்’ – திரையில் ஒரு சுவையான விருந்தாக அமையப்போகிறது. ஏப்ரல் 24 முதல் தியேட்டர்களில் சந்திக்கலாம்!
