‘சிங்காரம்’ : விமர்சனம்

‘சிங்காரம்’ : விமர்சனம்

ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா பாலாஜி, பத்மாவதி தயாரிக்க, .வி. கதிர்வேலு இயக்கத்தில்   உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் ‘சிங்காரம்’. 

சமூகத்தின் விளிம்பு மக்களின் கண்ணீரை, போராட்டங்களை பதிவு செய்யும் முயற்சியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

 1990களில் கோவை ஆனைமலைப் பகுதியில் துவங்குகிறது படம். அந்த  ஊருக்குள் வருகிறார்கள், நாடோடிக்கூட்டத்தினர். அந்த மக்களுக்குச் சாதியக் கட்டமைப்பும், ஆதிக்க வெறியர்களின் அடாவடிகளும் தொடர் தடைகளாக மாறுகின்றன. ரேஷன் கார்டு இல்லை, இருப்பிடச் சான்றிதழ் இல்லை என்ற எளிய காரணங்களால் அரசின் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படும் அவலம்.

இந்த நிலையில் அந்தக் கூட்டத்தாருக்கு ஒரு பேரிடியும், பெரும் ஆனந்தமும் வாய்க்கிறது.

அவை என்ன.. அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் எம்.எஸ்.பாஸ்கர். வழக்கம்போல எதார்த்தமானநடிப்பு.

முன்பு ஒரு படத்தில் கழைக்கூத்தாடியான இவர் பரத நாட்டிய ஆசிரியராக நடிக்கும் கதாபாத்திரத்தில் காமெடியில் அசத்தி இருப்பார். இதிலோ, நெகிழ வைக்கிறார்.  தான், தனது கூட்டம் என்பதைத்தாண்டி ஒட்டுமொத்த மக்கள் மீதும் வைத்திருக்கும் அன்பு,  சக மனிதர்களால் அவமானத்துக்குள்ளாகும்போது வெடிக்கும் துக்கம், இறுதியில் அவர் எடுக்கும் முடிவு… என எப்போதும்போல அற்புதமான நடிப்பை அளித்து உள்ளார்.

நம்மை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர், சென்ட்ராயன். வழக்கமாக, காமெடி என்கிற பெயரில் தானும் சிரிக்காமல், அடுத்தவரையும் சிரிக்கவிடாமல் செய்பவர். இந்தப் படத்தில், வில்லனாக மிரட்டி இருக்கிறார். “இத்தனை இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் இவரை,  வில்லன் –  கேரக்டர் ரோலுக்கு பயன்படுத்தவில்லையே” என இயக்குநர்கள் மீது ஆதங்கம் ஏற்படுகிறது. இனி சென்ட்ராயனுக்கு அது போன்ற அழுத்தமான வேடங்கள் அமையட்டும்.

(மறைந்த) மாரிமுத்துவின் நடிப்பைப் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அவரும், படவா கோபியும் அதிரடி அரசியல்வாதியாக மிரட்டுகிறார்கள். “நம்மக்குள்ள யாரு வேணாலும் ஜெயிக்கலாம்.. இன்னொருத்தனை உள்ளேை விடக்கூடாது” என அவர்கள் பேசிக்கொள்ளும் காட்சி, ஒரு உதாரமம்.

இளவரசுவும் எப்போதும்போல எதார்த்த நடிப்பில் கவர்கிறார்.

நடிகர்களின் யதார்த்தமான பங்களிப்புதான். குறவர் சமூகத்தின் மூத்தவராக எம்.எஸ். பாஸ்கர் தன் வாழ்நாளில் மறக்க முடியாத பாத்திரத்தை வழங்கியுள்ளார். அந்தத் தள்ளாத வயதிலும் குறவர் பாஷையைச் சர்வ சாதாரணமாக பேசி அவர் வெளிப்படுத்தும் நடிப்பு மிரட்டுகிறது. அவருக்கு இணையாகத் தீபாவும் தனது எதார்த்த நடிப்பால் நம்மை ஈர்க்கிறார்.இதர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் தீபா சங்கர், மனோபாலா,   மனோபாலா என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

என்ன இது.. படத்தின் நாயகன், யோகிபாபு பற்றிகூறவே இல்லையே.. என்கிறீர்களா..

படத்தின் மைனஸ் அவர்தான். சின்ன வேடத்தில் தோன்றும் நடிகர்கள்கூட  அத்தனை இயல்பாக நரிக்குறவர் பாசை பேசுகிறார்கள். ஆனால் இவரோ வழக்கம்போல அதே, கடமுடா பேச்சு.. அதே முகபாவம்.  தான் ஏற்று இருக்ுகம் நரிக்குறவர் கதாபத்திரக்காக எந்தவித மெனக்கெடும் செய்யவில்லை.  செய்திருக்க வேண்டும்.. அல்லது நடிக்க மறுத்திருக்க வேண்டும். “நாம தலைகாட்டினாலே படம் சக்சஸ்தான்” என தப்பாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்.

சாம் சி.எஸ்-ன் இசையில்  பாடல்கள் அனைத்தும் கவர்கின்றன. கதையோட்டத்துடன் பயணிக்கும்  பின்னணி இசை யும் நம்மை ஈர்கிகறது.

இய்ககுநர் வி.கதிர்வேலு, நமது சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்த முயற்சி செய்திருப்பது பாராட்ட வேண்டிய விசயம்.   இத்தனை ஆண்டுகள் கடந்தும் அடிப்படை உரிமைகளுக்காகத் தவிக்கும் ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்க நினைத்து இருக்கிறார். அதற்காக பாராட்டலாம். அதே நேரம், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்றி இருக்கலாம்.

ஆனாலும்,  சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம் என்பதால் அவசியம் பார்க்கலாம்.

 

தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம் – ராக் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள் – ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி
எழுத்து மற்றும் இயக்கம் – கே.வி. கதிர்வேலு
இசை – சாம் சி.எஸ்.
பாடல்கள் – விவேகா
ஒளிப்பதிவு –
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம் – குருராஜ்
சண்டைப் பயிற்சி – ஃபேன்டம் பிரதீப்
ஆடை வடிவமைப்பாளர் : என் ஜே சத்யா
மக்கள் தொடர்பு – ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Related Posts