முட்டை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாமா?

அசைவ பிரியர்களுக்கு மட்டும் அல்லாது குழந்தைக்கு ஊட்டசத்தாகவும் கொடுக்கப்படுகிறது முட்டை. அசைவம் எடுக்காத நாளில் அதற்குப் பதில் முட்டை ஒரு சிறந்த தேர்வாகும். ஒரு வயது குழந்தை தொடங்கி பெரியவர்கள் வரை முட்டையை உணவில் நாம் சேர்த்து கொள்கிறோம்.  திடீர் என சொல்லாமல் கொல்லாமல் வீட்டுக்கு விருந்தாளி யாராவது வந்துவிட்டாலோ’ அவசரமான நேரத்தில் எந்த குழம்புக்கும் ஏற்றது முட்டையாக தான் இருக்கும்.

தொட்டுக் கொள்ள 5 நிமிடத்தில் தயாராகிவிடும் ஆம்லெட். முட்டை தோசை, முட்டை சப்பாத்தி, முட்டை சாதம், முட்டை தொக்கு, முட்டை குழம்பு, முட்டை கிரேவி,  என அதிக வேலை இல்லாத அசைவை உணவு தயாரிக்க முடியும் என்றால் அது முட்டையாகதான் இருக்கும்.

அந்தகாலத்தில் எல்லாம் முட்டையை ஒரு கூடையில் வைத்து உத்தரத்தில் தொங்கவிட்டுவிடுவார்கள். இப்போது எல்லாம் முட்டைக்கு ஏற்ற வடிவத்தில் காகிதம், பிளாஸ்டிக் பாக்ஸ் வந்தது விட்டது. அதை நாம் வாங்கி ஃபிரிட்ஜில் வாரக்கணக்கில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

அப்படி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் முட்டை  நமது உடலுக்கு ஏற்றது தானா?  எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

மனித உடலுக்கு  தீங்கு ஏற்படுத்தும் சால்மோனெல்லா என்னும் பக்டீரியா விலங்குகளின் குடலில் இருக்கிறது.  இவை நம் உண்ணும் உணவுக்குள் கலந்துவிட்டால் வயிற்றுப்போக்கு,மற்றும் வாந்தி என பல நோய்களை  உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த பக்டீரியாவானது கோழி முட்டைகளின் உட்பகுதியிலும் மேல் புறத்திலும் இருப்பதால் கவனமாக எடுத்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

முட்டையின் வெளிப்புறத்தில் தானே இருக்கிறது என்று அலட்சியமாக இருக்கவேண்டாம். அது உள்ளே செல்லும் வாய்ப்புகளும் உண்டு. எனவே கவனமாக இருப்பது நல்லது. அசுத்தமான முட்டை ஓடுகளில்  இந்த சால்மொனெல்லா நுண்ணுயிரி வெளியில் வருவதால் பாதுகாப்பு அவசியம்.

முட்டையை நாம் வாங்கி வந்ததும் முதலில் வெந்நீர் கொண்டு கழுவி ஃபிரிட்ஜில் வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் வெளியில் இருக்கும் கிருமி அழிக்கப்படும். ஆனால் உள்ளே இருக்கும் கிருமி அப்படியேதான் இருக்கும். இதுவே வளர்ந்த நாடுகள் என்றால் முட்டைகள் ஓடுடன் இருக்கும் போதே வெந்நீரில் கழுவப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிறகுதான் விற்பனைக்கு வருகின்றன.ஆனால் அதுவும் உள்ளே இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்காது. இது ஆரோக்கியத்தில் பாதிப்பயே ஏற்படுத்தும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதால் அதன் மேற்புறத்தில் கிருமி அண்டாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர். முட்டை ஓடுகளில் இருக்கும் சால்மோனெல்லா கிருமிகளை ஏற்கனவே சுத்தம் செய்து குளிரூட்டப்படும் இடத்தில் வைத்து விற்பனை வருவதால் கிருமிகள் மேல் புறத்தில் தங்காது என்று சொல்லப்படுகிறது.

ஒரு சில நாடுகளில் முட்டையை வாங்கிய உடனே சமைப்பது நல்லது என்கின்றனர். மற்றும் முட்டையை குளிர்சாத பெட்டியில் வைத்து பயன்படுத்தும் போது  முட்டையின் மேல் புறத்தில் நீர் இருக்கும். இந்த நீரானது முட்டையின் ஓட்டில் இருக்கும் சிறு துளைகள் வழியே  உள்ளே செல்லும் போது உட்புறத்திலும் பாக்டீரியா வேகமாக பறவும் என்கின்றனர். எனவே முட்டையை அறை வெப்பநிலையில் வைப்பது,அல்லது வாங்கினால் உடனே சமைப்பது நல்லது என்கின்றனர்.

நாம் முட்டை வாங்கும் போது முட்டையின் மேல் தொல் அசுத்தமாக  அதிலேயே ஒட்டி இருந்தால் அப்படியே ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது. ஒரு முட்டையின் வெளிபுறத்தில் சால்மோனெல்லா பாக்டீரியா இருந்தால் அது அப்படியே மற்ற முட்டைகளிலும் பரவும் வாய்ப்பு அதிகம்.

முட்டையை வாங்கி நாள் கணக்கில் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருந்தாலும் அதன் ஓட்டில் பாக்டீரியா இருந்தால் அழியாது. அந்த குளிரிலும் உயிர் வாழும் தன்மை கொண்டாது. எனவே அறைவெப்பநிலையில் வைக்கும் போது வெளிப்புறத்தில் இருக்கும் பாக்டீரியா அளிக்கப்படும். ஆனால் உள்ளிருக்கும் பாக்டீரியா அழியாது.


இதற்கு தீர்வு  என்றால் முட்டையை வாங்கியவுடன் முதலில் வெந்நீரில் கழுவி அறைவெப்பநிலையில் வைப்பதே நல்லது. எனவே 3 முதல் 4 நாட்கள் வரை முட்டையை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதை தவிப்பதே நல்லது.

முடியாத நேரத்தில் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தாலும் 7 நாட்களுக்குள் அதை பயன்படுத்திவிடவேண்டும்.  பச்சையாக குடிப்பது கூடாது. எந்த முட்டை என்றாலும் வேகவைத்து, பொரித்து சாப்பிட்டால் முட்டையின் உள்ளே இருக்கும் சால்மோனெல்லா  அழிக்கப்படும். எந்த பொருள் என்றாலும் அவசரத்துக்கு மட்டுமே ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டுமே தவிர அதிக நாள்  வைத்து சாப்பிடக்கூடாது. அது உடல் நலத்திற்கு எதிரானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

-இனியன்

Related Posts