“ஈழ ஆதரவு போராட்டத்துக்கு வர பயந்த பாரதிராஜா!”  

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சர்ச்சையை எழுப்பி உள்ளது.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவும், ‘அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம்!’ என விஜய் சேதுபதியை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஈழத்தமிழர் ஆதரவாளரும், சமூக செயற்பாட்டாளருமான மூத்த பத்திரிகையாள் தாமஸ் அருள் செழியன், பாரதிராஜா குறித்து அதிர்ச்சகரமான ஒரு சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது போரை நிறுத்து என்று கும்பல் கும்பலாக போராடிக் கொண்டிருந்தோம்..

எல்லோரையும் ஒன்றிணைத்து ஒரே இயக்கமாக போராடினால் போரட்டம் வலுப்பெறும் என்று நினைத்து,
முத்துக்குமார் இறுதி ஊர்வலம் முடிந்த பின் நான், Bala G, பாரதி தம்பி, இயக்குனர் புகழேந்தி உள்ளிட்ட இன்னும் சில நண்பர்கள் இயக்குனர் பாரதி ராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

‘நீங்கள் வாருங்கள் உங்கள் தலமையில் போராடலாம்.. நீங்கள் வந்தால் இந்த போராட்டம் வீரியமடையும்.. பலரும் உங்கள் பின் அணிவகுத்து வருவார்கள் ‘ என்று அழைத்தோம்.

முதலில் ஆர்வமாக பேசியவர் கடைசியில் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். ‘எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நான் சி எம் (கலைஞர்) ட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திர்றேன்.

தாமஸ் அருள் செழியன்

நண்பர்கள் புலம்பிய படியெ கலைந்து சென்றோம்

மறுநாள், அதற்கு அடுத்த நாள் எல்லாம் காத்திருந்தோம்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போது ‘அவர்ட்ட (கலைஞரிடம்) கேட்க சங்கடமாயிருக்கு அதுனால நான் வந்தா சரியா இருக்காது..’ என்று பதில் சொல்லி மழுப்பினார் பாரதிராஜா.

அப்போது கலைஞர் டிவியில் தெற்கத்தி பொண்ணு தொடரை தயாரித்துக் கொண்டிருந்த பாரதிராஜா இப்போது சேதுபதிக்கு கடிதம் எழுதுகிறார்.

இதுவும் ஒரு தக்காளி சட்னியே!”

Related Posts