“அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’’ டிரெய்லரை வெளியிட்டார் உலக நாயகன் கமலஹாசன்

சென்னை; அச்ஷரா ஹாசன் நடிக்கும் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதி ஏற்கனவே வெளியிட்டு அசத்தினார். மேலும்   தற்போது ட்ரெண்ட் லவுட்   (Trend Loud) முதல் தயாரிப்பான இந்தபடத்தின் டிரெய்லரை அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில்  உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டார். இது படக்குழுவினரை பெரும் உற்சாத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் குறித்து இயக்குநர் ராஜா ராமமூர்த்தி வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம் இது தான். இதை விட வாழ்வில் வேறென்ன பெரிய ஆசிர்வாதம் வேண்டும். இந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையான உலக நாயகன் கமலஹாசன், எங்களின் கோரிக்கையை ஏற்று டிரெய்லரை வெளியிட்டது    எங்கள் மொத்தக்குழுவையும் பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்றார். மேலும் ஒரு சிறப்பாக அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில் டிரெய்லர் வெளியானது மகிழ்ச்சியாக இருபதாகவும் கூறியிருக்கிறார்.

அமெரிக்கவில் நடைபெறும் மதிப்புமிக்க இந்திய  திரைப்பட விழாவான Caleidoscope Indian Film Festival Boston க்கு “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நல்ல விமர்சனங்களை பெற்ற கேடி படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே தமிழ்  திரைப்படம் ஆகும். இப்படம் பாஸ்டன் (Boston) நகர திரையரங்குகளில் நவம்பர் 6 முதம் 8 ஆம் தேதி வரை திரையிடப்படுகிறது.

ஒளிப்பதிவு – ஷ்ரேயா தேவ் துபே

இசை – சுஷா

படத்தொகுப்பு – கீர்த்தனா முரளி

புரடக்‌ஷன் டிசைன் – ஷஹானு முரளிதரன்

உடை வடிவமைப்பு – தீமிஸ் வனேஷா

ஒலி வடிவமைப்பு – S.அழகியகூத்தன் & சுரேன்.G

விளம்பர வடிவமைப்பு – கபிலன்

லைன் புரடுயூசர் – கிரன் கேஷவ்

 க்ரியேட்டிவ் புரடுயூசர் – வித்யா சுகுமாரன்

பாடல்கள் – மதன் கார்கி

இந்த படத்தின் கதை சுருக்கம் டிரெய்லரை பார்ப்பவர்களுக்கு தெரியும். டிரெய்லரின் முக்கிய நோக்கம் என்பது, பவித்ரா கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை ரசிகர்களை யூகிக்க தூண்டுவதே ஆகும். பவித்ராவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் இந்த டிரெய்லர். நாயகியைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். உறவுகள், பாத்திரங்கள் ஆகியவற்றை உணரச்செய்வதே  படத்தின் கதை. இன்றைய கால அனைத்து பெண்களும் தன்னுள் சிறிதளவேனும் பவித்ராவை உணர்வார்கள் என்றனர்.

-யாழினி சோமு

Related Posts