சென்னை பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலியே கிரிக்கெட் வீரர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் சென்னையைச் சேர்ந்த வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காகவும் விளையாடுகிறார்.
1
கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்து தக்கவைத்தது பெங்களூரு அணி.
இவர், ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்தவர்.
இருவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல் – வினிராமன் திருமணம் வருகிற மார்ச் 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.
வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர். ஆகவே இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படியும் பெண் வீட்டாரால் அச்சிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

