பார்க்கவே அதிருதே… ‘ராக்கா’ அவதாரத்தில் அல்லு அர்ஜுன் செம மாஸ்!

பார்க்கவே அதிருதே… ‘ராக்கா’ அவதாரத்தில் அல்லு அர்ஜுன் செம மாஸ்!

புஷ்பா-2 தந்த அதிரடியான வெற்றிக் கொண்டாட்டம் அடங்குவதற்குள்ளேயே, இந்தியத் திரையுலகையே தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன். சாதாரணமாக ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்தாலே அது ட்ரெண்டிங் ஆகும், ஆனால் ‘ராக்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான விதம் சர்வதேச அளவில் ஒரு மேஜிக்கையே நிகழ்த்தியுள்ளது!

ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு புதுமையைச் செய்யும் அல்லு அர்ஜுன், இந்த முறை ‘ராக்கா’ மூலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு மேக்-ஓவரில் மிரட்டுகிறார். சும்மா வந்து நின்றாலே அப்ளாஸ் அள்ளும் ஒரு உச்ச நட்சத்திரம், இந்தக் கதாபாத்திரத்திற்காக தினமும் 3 முதல் 4 மணி நேரம் மேக்கப்பிற்காகச் செலவிடுகிறார் என்பதுதான் ஹைலைட். அவருடைய அர்ப்பணிப்பைப் பார்த்து படக்குழுவே மிரண்டு போய்க் கிடக்கிறது.

இந்த ‘ராக்கா’ ஸ்டைல் எந்தளவுக்குப் பற்றிக்கொண்டது என்றால், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா அல்லு அர்ஜுனின் சிக்னேச்சர் மேனரிசத்தை அப்படியே ரீ-கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டுள்ளார்.

வெற்றி கிடைத்துவிட்டதே என்று ஒரே பாணியில் தேங்கிப் போகாமல், அடுத்தடுத்த படங்களில் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் அல்லு அர்ஜுனின் வேகம் பிரமிக்க வைக்கிறது. இது வெறும் சினிமா மேக்-ஓவர் மட்டுமல்ல, ஒரு கலைஞனின் அசுர உழைப்பு! ‘ராக்கா’ மீண்டும் இந்திய சினிமாவை உலக அரங்கில் கர்ஜிக்க வைக்கப்போவது உறுதி.

 

Related Posts