Raayan Audio Launch:தனுஷ் ரசிகர்களே தயாரா? ராயன் இசை வெளியீட்டு விழாவை டிவியில் ஒளிபரப்புறாங்க! By Mohanraj Thangavel| Updated: Sunday, July 14, 2024, 11:05 [IST] சென்னை: தமிழ் சினிமாவில் இந்த மாதம் வெளியாகவுள்ள இரண்டாவது மிகப்பெரிய படம் என்றால் அது தனுஷின் 50வது படமான ராயன் படம்தான். இந்த படத்தினை தனுஷே கதை, திரக்கதை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் ஒளிபரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி, இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. பில்டப் எல்லாம் நல்லாதான் இருக்கு.. புதுசா எதுவுமே இல்லையே?.. ராயன் டிரெய்லர் எப்படி இருக்கு? படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். அடங்காத அசுரன்: அடங்காத அசுரன் பாடலும் வாட்டர் பாக்கெட் பாடலும் ராயன் ரம்பல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. கானா பாடல் வடிவில் இந்த பாடல் அமைந்ததால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்தது. இசை வெளியீட்டு விழாவின் போது அடங்காத அசுரன் பாடலை தனுஷ் மற்றும் ரகுமான் பாடினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயைப் போல பரவியது. யார் இந்த Dead Pool? Hero or Villain? | Dead Pool and Wolverine | Dead Pool Story ராயன் டிரெய்லர் வெளியானது.. 50வது படத்துக்கு விஸ்வரூபம் எடுத்த தனுஷ்.. சும்மா மிரட்டுது! ஏ சர்டிஃபிகேட்: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க பக்கா கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை சென்சார் தரப்பில் இருந்து ஏ சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு வந்தால் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் படத்தினை பார்த்த தயாரிப்பாளர் தயாநிதி மாறன், படத்தில் இருந்து ஒரு ஃபிரேமைக் கூட குறைக்க கூடாது என முடிவெடுத்துவிட்டார் எனவும் படம் ஏ சர்டிஃபிகேட்டுடன் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியானது. இசை வெளியீட்டு விழா: ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இதனாலே படத்தில் நடிப்பு அசுரன் தனுஷ், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது வரும் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

