இன்னும் விறுவிறுப்பாகிறது இந்தியன் 2! பத்து நிமிட காட்சி குறைப்பு!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க கடந்த வெள்ளியன்று “இந்தியன் 2” திரைப்படம் வெளியானது. கமல் மேக் அப் – நடிப்பு, பிரபல நட்சத்திரங்கள், அசத்தும் அனிருத் இசை, பிரம்மாண்ட காட்சிகள் என ரசிகர்களை கவந்தது இந்தத் திரைப்படம்.
அதே நேரம், படத்தின் நீளத்தை குறைக்கலாமே.. படம் இன்னும் விறுவிறுப்பாக அமையுமே என்கிற கருத்தும் சிலரால் முன் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து படத்தில், 11 நிமிடங்கள் 51 வினாடிகள் கொண்ட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து இந்தியன் 2 படம் இன்னும் விறுவிறுப்பாக அமையும் என்ற பாசிடிவ் குரல்கள் ஒலிக்கின்றன.
