விதார்த்தின் ‘அஞ்சாமை’: ‘கல்வி தான் ஒரே ஆயுதம்!’ : அதிரவைக்கும் ட்ரைலர்!

விதார்த்தின் ‘அஞ்சாமை’: ‘கல்வி தான் ஒரே ஆயுதம்!’ : அதிரவைக்கும் ட்ரைலர்!

திருச்சித்ரம் நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரிக்க, அறிமுக இயக்குநர் சுப்புராமன்  உருவாக்கத்தில், விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘அஞ்சாமை’.

படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு வாரியம்.

இந் நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில்  செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு  முன் மாற்றப்பட்டது; ஒன்றிய  அரசு கொண்டு வந்த நீட் தேர்வு புகுத்தப்பட்டது.

இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.

நீட் தேர்வு காரணமாக, மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவங்களும் நடந்தன.

இதை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ட்ரைலரில் வரும், ‘தேர்தலுக்கு முன் கையெடுத்து கும்பிடுவது நீங்கள், தேர்தலுக்கு முன் குனிவது நாங்களா…’, ‘கல்விய கஷ்டப்பட்டுத்தான் படிக்கணுமா, கஷ்டப்பட்டு படிக்கிற மாதிரி இந்த சிஸ்டத்த ஏன் உருவாக்கி வச்சிருக்காங்கன்னு நாம என்னைக்காவது யோசிச்சிருக்கோமா’, ‘இங்கயிருக்கிறவங்க கொஞ்சம் மானம் ரோஷம் உள்ளவங்க’, ‘இங்க ஒரு பெரிய யுத்தமே நடந்துகிட்டு இருக்கு, நம்மள மாதிரி ஆளுங்க உடைச்சு வெளில வரனும்னா நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்விதான்’… இப்படி  பல வசனங்கள் அதிரடியாக உள்ளன.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விரைவில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.