யாஷ் நடிக்கும் டாக்ஸிக் அலையில் ததும்பும் காதல்! மார்ச் 2-ல் வருகிறது ‘தபாஹி’!  

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் அலையில் ததும்பும் காதல்! மார்ச் 2-ல் வருகிறது ‘தபாஹி’!  

‘கே.ஜி.எஃப்’ நாயகன் யாஷ் மீண்டும் ஒரு அதிரடி அவதாரத்தில் களம் இறங்கும் திரைப்படம் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’. இந்தப் படத்தின் முதல் அதிரடியான அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது. படத்தைப் போலவே படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’  பாடலும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடிக்க மார்ச் 2-ஆம் தேதி ரிலீஸாகிறது!

கடற்கரையில் ஒரு காதல் காவியம்!

வெளியாகியுள்ள போஸ்டரில், ஆர்ப்பரிக்கும் கடலோரத்தில் யாஷ் மற்றும் கியாரா அத்வானி இருவரும் ஒருவரை ஒருவர் அன்போடு தழுவிக் கொண்டு நடக்கும் காட்சி, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • வெண்ணிற உடையில் தேவதை போல் கியாரா!

  • ஸ்டைலான மாஸுடன் யாஷ்! இவர்களின் கெமிஸ்ட்ரி இந்தப் பாடல் ஒரு ஆழமான, உணர்ச்சிகரமான மெலோடியாக இருக்கும் என்பதை இப்போதே பறைசாற்றுகிறது.

விஷால் மிஸ்ராவின் மேஜிக்!

உணர்ச்சிகரமான பாடல்களுக்குப் பெயர் பெற்ற விஷால் மிஸ்ரா, இந்தப் பாடலை இசையமைத்துப் பாடியுள்ளார். மார்ச் 2-ஆம் தேதி இவரின் குரலில் ‘தபாஹி’ ஒலிக்கும்போது, அது ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் முதலிடம் பிடிப்பது உறுதி!


படத்தின் ஹைலைட்ஸ்:

  • இயக்கம்: கீது மோகன் தாஸ் (யாஷ் இதற்காகத் திரைக்கதையிலும் பங்களித்துள்ளார்).

  • நட்சத்திர பட்டாளம்: யாஷ், கியாரா அத்வானியுடன் இணைந்து நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா என ஒரு பெரிய டீமே களமிறங்கியுள்ளது.

  • மொழிகள்: கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாகப் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

  • ரிலீஸ்: மார்ச் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

“அமைதியற்ற கடல்… அடக்க முடியாத ஆசை… மறக்க முடியாத இசை!” – இதுதான் ‘தபாஹி’.

Related Posts