திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட நவசமாஜ் துவக்க விழா!
டெல்லியில் பதிவு பெற்ற நவசமாஜ் அமைப்பு தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லத்திடத்தில் புதிய மாவட்டக் கிளை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முதலில் குத்துவிளக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பின்னர், கோவை மற்றும் திருப்பூர் நிர்வாகிகளுக்குபதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மருத்துவர் சமுதாய மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்விபயில சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் மாநிலத் தலைவர் முனைவர் பேராசிரியர் மா. அன்பானந்தம், மாநில பொருளாளர் முனைவர் சேகர் பாபு. மாநில பொதுச் செயலாளர் பி. சி. பண்வார், அமைப்புச் செயலாளர் பாலச்சந்தர். மாநில இணைச் செயலாளர் அரிமா. மு. மதிவாணன். சென்னை மாவட்டத் தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேனி சரவணன். டி.கே.தண்டபாணி. மாவட்ட தலைவர்கள் நாமக்கல் சிவராஜ். கரூர் விஜயன். செயலாளர் திருமூலர் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் அன்பழகன், தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக பிற்பகல் ஒரு மணி முதல் புதுச்சேரி டாக்டர் புகழேந்தி மற்றும் வர்மக்கலை மருத்துவர் திருச்சி கிஷோர் ஆகியோரால் சித்த மருத்துவ முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளானமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.