மூக்குத்தி அம்மன் படத்துக்கு வி.சி.க. ஆதரவு!

யன்தாரா நடித்து வெளியாகி உள்ள, மூக்குத்தி அம்மன் திரைப்படத்துக்கு, திராவிடர் கழக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சவரணனுடன் இணைந்து இயக்கி ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் வெளியாகி உள்ளது. நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார்.

படத்தில் கறுப்பு சட்டை அணிந்த ஒருவர் கூட்டத்தில், “நாங்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ விழாக்களில் கலந்துகொள்வோம். இந்து மத விழாக்களில் கலந்துகொள்ள மாட்டோம்” என்று பேசுவது போன்ற ஒரு காட்சி வருகின்றனது.

வன்னியரசு பதிவு

திராவிடர் கழகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், “இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கின்றனர், பிற மதங்களை விமர்சிப்பதில்லை” என்ற விமர்சனம் இருக்கிறது. இதே விமர்சனம், மனுஸ்மிருருதி எரிப்புப் போராட்டத்தை வி.சி.க. தலைவர் திருமாவளவன் நடத்தியபோதும் எழுந்தது.

அதற்கு அவர்கள், “இங்கே இந்து மதம்தான் கோலோச்சுகிறது. அதாவது பிராமணர்கள்தான், ஒரே மதம் என்று சொல்லி சக இந்துக்களை சாதியாக பிரித்து இழிவுபடுத்துகின்றனர் ஆகவேதான் இந்து சனாதன மதத்தை எதிர்த்து போராடுவது அவசிய தேவையாக இருக்கிறது” என்ரு பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தை, திராவிடர் கழகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

அவர்கள், “இப்படத்தில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் போன்ற சாமியார்களை காண்பிக்கவில்லை. சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டும்கூட, அவரை விமர்சிக்கவில்லை” என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்ன் அரசு, மூக்குத்தி அம்மன் படத்தைப் பாராட்டி உள்ளார்.

அவர் தனது முகநூல் பதிவில், “சாமியார்களில், சாமியார்-போலிச்சாமியார் என யாரும் இல்லை.எல்லோரும் ஏமாற்றுப்பேர்வழிகள் தான்.

பாபா குருதேவாகட்டும், ஜக்கிவாசுதேவாகட்டும், காஞ்சி விஜயேந்திரராகட்டும் எல்லா பயலுகளுமே பிராடு தான் என்பதை துணிச்சலாக சொல்லி இருக்கிறார்கள்” என மூக்குத்தி அம்மன் படத்தைப் பாராட்டி உள்ளார்.

இது படம் குறித்த சர்ச்சையை மேலும் அதிகரித்து உள்ளது.

சுந்தரன்

Related Posts