ஆபாசமாக பேசிய வனிதா.. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் லீகல் நோட்டீஸ்..!

சென்னை: யூடியூப் சேனல் நேர்காணலில் தன்னை ஆபாசமாக பேசிய நடிகை வனிதாமீது  லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த வாரம் நடிகை வனிதாவும் நடிகை, இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பங்கேற்றனர். வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு பரிந்து  பேசியதாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கண்டமேனிக்கு வார்த்தைகளால் வசைபாடினார் வனிதா.

குழாயடிச் சண்டைபோல ஆபாசமான வார்த்தைகளால் அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் நீ வா, போடி வாடி என கெட்ட வார்த்தைகளால் காது கொடுத்துக் கேட்டகூட முடியாத அளவுக்கு காதுகள் கூசும் அளவுக்கு வனிதாவின் வார்த்தைகள் இருந்தன. நீ என்ன பத்தினியா உன்னுடைய தொழிலில்தான் நானும் இருக்கேன்.  செருப்பு பிஞ்சுரும் எனவும், அவரது கணவரைப் பற்றியும் தறைக்குறைவாக பேசினார்.

இதனைப் பொருத்துக் கொள்ளமுடியாத லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது கணவரும் வனிதா மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது, Nian media private ltd நிறுவனத்திற்கு சொந்தமான யூ டியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த Skype நேர்க்காணலின் போது வனிதா விஜயக்குமார் என்னையும் எனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயக்குமார் தான் அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார்.

 வழக்கறிஞர் மூலம் ஆனால் நேர்க்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயக்குமாருக்கு குற்றவியல் (Criminal) மற்றும் உரிமையியல் (civil) சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

அதன் படி தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் (mahila Ayog) ஆகியோருக்கும் நோட்டீஸின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. என  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.யாழினி சோமு

Related Posts