“லாக்கப்” ட்ரைலர் ரிலீஸ்  நல்லவன் யாரு?கெட்டவன் யாரு வைரலாகும் டயலாக்..!

சென்னை; ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில்  உருவாகியிருக்கும் படம் ’லாக்கப்’. இந்தப் படத்தில் நாயகனாக வைபவ் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக  வாணி போஜன் நடிக்கிறார். S.G.சார்லஸ் இயக்கத்தில்   உருவாகியுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில்  வைபவ், வெங்கட் பிரபு இருவரும் போலீசாக நடித்துள்ளனர். இவர்களுடன்  பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.  

த்ரில்லர் ,காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும்  ’லாக்கப்’  படத்தின் ட்ரைலர் இன்று  யூடியூபில் வெளியாகியிருக்கிறது.   ரசிகர்களிடத்தில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   மேலும் இந்தப்  படத்தின் ட்ரைலரில் வரும் வசனம் ’நல்லவன் யாரு?கெட்டவன் யாருன்னு இந்த போலீஸ் டிபார்ட்மெண்டில்’ தெரியாமட்டங்குது. என்ற வசனம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி  ZEE5 OTT தளத்தில்  வெளியாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.யாழினி சோமு

Related Posts