‘க’ உணவக ஸ்பெஷல் அடை

நாகரிக வாழ்க்கை முறையில்  பீசா, பர்கர் என தேவையற்ற ‘உணவு’களை சிரமமப்பட்டு  மென்று விழுங்கி அதையே பழக்கப்படுத்திக் கொண்டோம்; ‘உணவே மருந்து’ என்ற நம் முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கயை தொலைத்தோம்! ஆம், ருசியானவை என்பதோடு ஆரோக்கியமான நமது பாரம்பரிய உணவுகளை ஒதுக்கினோம்.

இன்று நம்மிடைய பெருகியிருக்கும் நோய்களுக்குக் காரணம் இதுதான்.

ஆனால் தற்போது மீண்டும் நம் நல் பாரம்பரியத்தைத் தேடித் திரும்ப ஆரம்பித்து இருக்கறோம்.

நமது தாத்தா, பாட்டிஅம்மா, அப்பாக்கள்  ஆரோக்யமாக நீடு வாழ காரணமான ருசியான சத்தான உணவுகளை அதே ருசிசத்துக்களுடன் மீண்டும் நமக்கு அளிக்கிறது   இயக்கை உணவகம்’.

இங்கு முழுக்க முழுக்க பாரம்பரிய சமையல்தான்.  ஆம் மண்பாணை சமையல்!

நம் பாரம்பரியப்படி அன்பான உபசரிப்பு.

நமது நாவின் ருசியறிந்து ‘க’ வழங்கும் ‘கோதுமை வாழைப்பழ அடை’ பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 350 கிராம்,

வாழைப்பழம் – 2,

வெல்லம் அல்லது கருப்பட்டி – 200 கிராம்,

ஏலக்காய் – 5 கிராம் (பொடிக்கவும்),

முந்திரிப்பருப்பு – 100 கிராம் (நறுக்கவும்),

நெய் – 20 மி.லி.,

தேங்காய் – 100 கிராம்,

தண்ணீர் – 1/2 லிட்டர்.

செய்முறை

வெல்லம் அல்லது கருப்பட்டியை துருவி  தண்ணீரில் கரைத்து தூசி இல்லாமால் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.   

பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, இத்துடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், கரைத்த வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். 

தோசைக்கல்லை காயவைத்து சிறிது நெய் விட்டு அடையாக ஊற்றி மேலே முந்திரிப்பருப்பு, பல்பல்லாக நருக்கிய தேங்காய் தூவி மிதமான சூட்டில் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.  

சூப்பரான கோதுமை வாழைப்பழ அடை ரெடி.

வாழைப்பழத்தில் இருக்கும் அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்த உதவிசெய்கிறது. குடலியக்கம் சிறப்பாக வைத்துக் கொள்ளவும், செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது. கோதுமையில் செலினியம் என்கிற மூலப் பொருள் அதிகமாக இருக்கிறது.  இந்த செலினியம்  நம்முடைய  சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் இது நமது தோலை தளர்ந்து விடாமலும், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. கொரோனாவுக்கு முன்னாடி சாப்பிட்டது இன்னும் நாக்கில் சுவை நிறைந்துள்ளது.

எஸ்.யாழினி  சோமு

Related Posts