ரசிகர்களை கவர்ந்த தனுஷின் ’ரகிட ரகிட ரகிட’ சாங்..!
நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் ’ஜகமே தந்திரம். தனுஷ் பிறந்த நாளான ஜூலை 28 அன்று இந்த படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
தனுஷ் பிறந்தளுக்கு முன்னதாகவே காமன் டிபி வெளியிட்டது படகுழு. அதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரப படத்திலிருந்து சந்தோஷ் நாராயணனின் இசையிலும் தனுஷ், மற்றும் தி, சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள‘ரகிட ரகிட ரகிட…’ என்ற பாடல் வெளியிட்டு ரசிக்கர்களிடத்தில் பெறும் வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்து திரைக்க வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ரிலீஸ் செய்வதற்கு இயல்பு நிலைக்காக காத்திருக்கிறது படக்குழு.
தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனின் குரலில் ரகிட ரகிட ரகிட பாடல் கேற்பதற்கு மனதில் உச்சாகத்தை ஏற்படுத்துகிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்த பாடலில் வரும் தனுஷின் தோற்றமும் நடிப்பும் அவரது முறுக்கு மீசை, வேட்டி சட்டை அப்படியே அவது மாமனார் ரஜினிகாந்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்ற பாடலை நினைவூட்டுகிறது என்றே சொல்லவேண்டும்.
‘ரகிட ரகிட ரகிட…’ என்ற பாடலும் அப்படிதான் இருக்கிறது. தனுஷின் 37 வது பிறந்தநாளான ஜூலை 28 இந்த பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை படைத்துள்ளது.
யாழினி சோமு