’துக்ளக் தர்பார்’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை;வித்தியாசமான கொட்டப்பில் விஜய் சேதுபதி மற்றும் ஆர். பார்த்திபன் சேர்ந்து நடித்திருக்கும் படம் துக்ளக் தர்பார்.அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆர்.பார்த்திபன் அரசியல்வாதியாக இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியுடன் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் இணைந்திருக்கின்றனர். குறிப்பாக மஞ்சிமா மோகன் விஜய் சேதுபதியின் தங்கையாக வருகிறார். ’துக்ளக் தர்பார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் அவர் இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது.
விஜய் சேதுபதியின் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சூழ்நிலையில் ’துக்ளக் தர்பார்’ படத்தின் முதல் பாடலான ’அண்ணாத்த சேதி’ என்று அழைக்கப் படும் அந்தப் பாடல் வெளியாகும் நேரத்தையும் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 5மணிக்கு வெளிடப்போவதாக அறிவித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
இந்த படத்திற்கு இசை 96 படத்தில் இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழினி சோமு