பிரிட்டனில்.. ஈழத்தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன்!

பிரிட்டனில்.. ஈழத்தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன்!

பிரிட்டனில்.. ஈழத்தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் உமா குமரன். இவர், தொழிற்கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ என்கிற தொகுதியில் போட்டியிட்டு, 19,145 வாக்கு பெற்று வெற்றிபெற்றார். இது  அவரது தொகுதியில் வழங்கப்பட்ட மொத்த வாக்குகளில் 44 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் பெண் ஒருவர் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குத் தேர்வாவது இதுவே முதல் முறை.

யார் இந்த  உமா குமரன்?

உமா குமரனின் பெற்றோர், ஈழத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது, அங்கிருந்து தப்பி வந்து பிரிட்டன் நாட்டில் குடியேறினர். கிழக்கு லண்டனில் பிறந்து, வசித்தனர். இங்குதான் உமா குமரன் பிறந்து வளர்ந்தார். இங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தார்.

தற்போது அவர், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார். இந்த தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சமூக செயற்பாட்டாளரான இவர் பல்வேறு சமூக அமைப்புளுடன் இணைந்தும், ஐ.நா, சுகாதாரம், சுற்றுச்சூழல் சார்ந்து பணியாற்றுகிறார்.  கடந்த 15 ஆண்டுகளாக அவர் லேபர் கட்சியில் செயல்பட்டு வருகிகிறார்.“இதுதான் நான்!”: உமா குமரன் பேட்டி!

உமா குமரன் அளித்த பேட்டியில், “ஈழத்தில் நடந்த உள்ளாட்டு போட்டியினால் எங்களது நிலை மாறியது. பூமிக் கோளின் பல்வேறு பகுதிகளில் எங்கள் மக்கள் தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக  பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குடியேறி உள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் எனது பாட்டி உயிரிழந்தார்.  தேர்தல் காரணமாக இறுதிச் சடங்கில் நேரடியாக சென்று பங்கேற்க முடியாமல், விர்ச்சுவல் முறையில் பங்கேற்றேன்.

இது தான் எங்கள் வாழ்வின் எதார்த்தம். இருந்தாலும் தேர்தலில் தான் போட்டியிடுவது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதாகும்.

புரட்சி என்பது என் ரத்தத்தில் கலந்தது. எனது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவராக செயல்பட்டவர்” என்றார்.

பாலஸ்தீன விவகாரம், காலநிலை மாற்றம், தமிழ் சமூகத்தின் முன்னேற்றம், தொகுதி மக்களுக்கு மலிவு விலையிலான வீடு, விரைவான மருத்துவ சேவை, உள்கட்டமைப்பு சார்ந்து நிதி செலவினம் போன்ற வாக்குறுதிகளை இந்த தேர்தலில் அவர் மக்களிடம் அளித்திருந்தார். தற்போது வெற்றியும் பெற்று இருக்கிறார்.

ஈழப் பெண்மணி உமா குமரன் எம்.பி. அவர்களை tamilankural.com இணைய இதழ் சார்பாக வாழ்த்துவோம்!