மனதை மயக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ 2வது சிங்கிள் பாடல்!:

மனதை மயக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ 2வது சிங்கிள் பாடல்!:

தொடர்ந்து தரமான படங்களை அளித்து வரும் வி ஹவுஸ் புரடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க,  ‘கற்றது தமிழ்’,‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில்  வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’.

‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி –  அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளனர்.  முக்கிய கதாபாத்திரத்தில் சூரி தோன்றுகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பும் இப்படத்தின் 2வது சிங்கிள் பாடல், சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியாகி உள்ளது.

பாடல் எப்படி?

சந்தோஷ் நாராயணின் குரலும், யுவனின் இசையும் ஒன்று சேர சங்கமித்த காதல் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள  ‘காடோடு பாலை, வெயில் வெளி தாண்டி’,  “கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஓர் மொழியாய் உனை இழந்து வாடுகிறேன்” போன்ற வரிகள் போன்ற வரிகள், நம்மை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்கின்றன.

 

 

 

 

Related Posts