“தொடர்ந்து நடிப்பேன்!”: ஜீவா சுப்ரமணியம்

சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் முக்கிய கதாபாத்தில் நடிக்கு கவனத்தை ஈர்த்தவர், ஜீவா சுப்ரமணியம். திருநங்கையான இவர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் படத்திலும் நடித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், “அவள் நங்கை’  என்ற குறும்படத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தற்போது இவர், “கொரனா கால பொது முடக்கத்தால் திரைத்துறையும் முடங்கிக் கிடந்தது. தற்போது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. எனக்கும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து நடித்து, சிறந்த நடிகை என பெயர் வாங்குவேன்!” என்கிறார் நம்பிக்கையுடன்.

Related Posts