பின்னணி இசை இல்லாத ‘டிராக்டர்’ படத்துக்கு மேலும் ஒரு அங்கீகாரம்!
பின்னணி இசை இல்லாமல், தமிழில் உருவாகி இருக்கும் “டிராக்டர்” திரைப்படம், மும்பையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், ஜூரி அவார்டு பெற்றுள்ள்ளது.
டிராக்டர் திரைப்படத்தில், வழக்கமான பின்னணி இசை சேர்ப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக இயற்கையான சுற்றுப்புற ஒலியை பதிவு செய்தும் (Sync Sound) நடிகர்களின் வசனத்தை தளத்திலே பதிவு செய்தும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.இந்திய மொழி திரைப்படங்களை பிரான்ஸ் நாட்டில் வெளியிடும், தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக வெளியிட்டு வருபவர், ஜெயந்தன். பொழுது போக்கு படங்களை வெளியிடுவது இவரது தொழில் என்றாலும், கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களை தயாரித்து மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இவரது எண்ணம். இந்த எண்ணத்தை, டிராக்டர் படத்தை தயாரித்ததன் மூலம் துவக்கி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் ரமேஷ் யந்த்ரா இயக்கி உள்ளார். ஜெயராமன், ஸ்வீதா பிரதாப் உள்ளிட்டோர் ஜோடியாக நடித்து உள்ளனர். பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி மற்றும் இயக்குனர் ராம்சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
கௌதம் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஒலி வடிவமைப்பை ராஜேஷ் சசீந்திரனும் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை பிரபல கலை இயக்குனர் டி.முத்துராஜூம் செய்துள்ளார்கள்.
டிராக்டர் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில் பட்டியலிடப்பட்டது. மேலும், சர்வதேச பிரீமியர் அந்தஸ்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவுக்குச் சென்றது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற 12வது இந்தியன் சினி பிலிம் பெஸ்டிவல் நிகழ்வில், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
நிகழ்வில், தயாரிப்பாளர் ஜெயந்தனுக்கு, சுஜாய் முகர்ஜி விருது வழங்கினார்.
இது, டிராக்டர் படத்துக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு அங்கீகாரமாகும்.
தயாரிப்பாளர் ஜெயந்தன், ” வெறும் பொழுதுபோக்கைக் காட்டிலும் அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பும் திரைப்படமாக இருக்கும். மேலும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தி உள்ளது டிராக்டர் திரைப்படம்” என்றார்.
விரைவில் இத்திரைப்படம், திரையரங்களில் வெளியாக உள்ளது.