வாலி பிறந்த நாள் விழா: எம்.எஸ்.பெருமாள், பூவை செங்குட்டுவன் ஆகியோருக்கு விருது!

வாலி பிறந்த நாள் விழா: எம்.எஸ்.பெருமாள், பூவை செங்குட்டுவன் ஆகியோருக்கு விருது!
காவியக் கவிஞர் வாலியின் பிறந்தநாளை வருடம் தோறும் கொண்டாடுகிற வாலி பதிப்பகம் இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஞாயிறு மாலை திருச்சியில் கவிஞர் வாலியின் பிறந்தநாள் விழாவை திருச்சி நகைச்சுவை மன்றத்தின் ஆதரவுடன் நடத்துகிறது.
வருடம் தோறும் கவிஞர் ஒருவருக்கும் ,எழுத்தாளர் ஒருவருக்கும் ரூபாய் 50,000 பண முடிப்புடன் கவிஞர் வாலி விருது கவிஞர் வாலியின் நண்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களின் பங்களிப்புடன் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கவிஞர் வாலி விருது மூத்த திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கும்
சென்னை பொதிகை தொலைக்காட்சியில் பல்வேறு நாடகங்களை படைத்த படைப்பாளி,
அவள் ஒரு தொடர்கதை போன்ற வெற்றிகரமான திரைப்படங்களின் கதாசிரியர் எழுத்தாளர்
திரு எம் .எஸ் பெருமாள் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது .
திருச்சியில் நடைபெறவுள்ள இவ்விழாவில் அரசியல், இலக்கிய, திரைப்படப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் .

Related Posts