கடைசி உலகப்போர் : விமர்சனம்: ரசிக்க வைக்கும் வித்தியாசமான முயற்சி

கடைசி உலகப்போர் : விமர்சனம்: ரசிக்க வைக்கும் வித்தியாசமான முயற்சி

எதிர்காலத்தில்.. அதாவது 2028-ல் நடக்கும்  அதிரடி கதை.

இந்திய நாட்டில், லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஆளும் தரப்பினர், தங்களுக்கு சரியாக மிஷன் கிடைக்காததால் அவசர நிலையைப் பிரகடனம் செய்கிறார்கள். தமிழகம் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. முதல்வரான நாசர், ஆலோசகர் நட்டி, மகள் அனகா ஆகியோரை வீட்டுச் சிறையில் வைக்கிறார்கள்.

ஆனால், உலக அளவில் அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஐநா சபையிலிருந்து விலகி சீனா தலைமையில் சில நாடுகள் ரிபப்ளிக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இந்தியா சேரவில்லை. இதனால் இலங்கை வழியாகச் சீனா, தமிழகத்தில் புகுந்து முதல்வராக இருக்கும் நாசரைத் தனி நாட்டின் பிரதமராக அறிவிக்கிறது.

ஏற்கனவே நாசரின் மருமகன் நட்டி அவரைப் பொம்மையாக ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். அதிகாரம் தன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவருக்குச் சீன ஊடுருவல் ஏதுவாகக் கிடைக்க, அவர்கள் மூலம் மக்களைக் கொன்று குவிக்கிறார். அவர்களைக் காப்பாற்றத் தமிழ் ஆதி என்ன செய்கிறார் என்பதே கதை.

தமிழ் கதாபாத்திரத்தில் ஆதி வருகிறார். முதல்வர் மகள் அனகா மூலம் கல்வி துறையில் மாற்றம் கொண்டுவரப் போராடுவதும் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறார். பாத்திரத்துக்கு ஏற்ற சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

அரசியல்வாதிகளுக்கே அல்வா கொடுக்கும் கில்லாடியாக வருகிறார் நட்டி. வழக்கம்போலவே தனது அதகள நடிப்பால் கவர்கிறார்.

ஹீரோயின் அனகா, ஹரீஸ் உத்தமன் ஆகியோரும் கவர்கின்றனர்.

அழகம் பெருமாள் சீமானை நினைவுபடுத்துகிறார். அவர் பெயர் புலி. இதில் ஆதி இயக்குநராக அரசியல் பேசியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இலங்கை படையின் பிரியங்கா பெரைரா. ஆதிஏதோ சொல்ல வருவது புரிகிறது.

கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. உலகப்போர் வந்து சென்னையில் குண்டு போட்டால் அண்ணாசாலை, சேப்பாக்க ஸ்டேடியம் எப்படியிருக்கும் என்று காட்டியிருப்பது அதிரவைக்கிறது.தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசரியர், இயக்குநர் என பல துறைகளையும் கைவசம் எடுத்துக்கொண்டு நிஜ ஹீரோவாக ஆகி இருக்கிறார் ஆதி.

அவருக்கு பாராட்டுகள்.

மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.